டவுட் தனபாலு| Dinamalar

சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : மார் 22, 2020 | கருத்துகள் (1)
Share
தி.மு.க., - எம்.எல்.ஏ., கீதா ஜீவன்: தமிழகத்தில், பெண்களுக்கு வழங்கப்படும், திருமண நிதியுதவி, இரண்டு குழந்தைகள் பெற்ற பிறகு தான், சம்பந்தப்பட்ட பெண்களுக்கு கிடைக்கிறது. நிதியுதவி தாமதமாக கிடைப்பதை, அரசு சரி செய்ய வேண்டும்.'டவுட்' தனபாலு: பெண்களுக்கு நிதியுதவி, திருமணத்தின் போது தாலிக்கு தங்கம், 'ஸ்கூட்டி' போன்றவை எல்லாம் வழங்கப்படுகின்றன; வரவேற்கப்பட வேண்டிய விஷயங்கள்
 'டவுட்' தனபாலு

தி.மு.க., - எம்.எல்.ஏ., கீதா ஜீவன்: தமிழகத்தில், பெண்களுக்கு வழங்கப்படும், திருமண நிதியுதவி, இரண்டு குழந்தைகள் பெற்ற பிறகு தான், சம்பந்தப்பட்ட பெண்களுக்கு கிடைக்கிறது. நிதியுதவி தாமதமாக கிடைப்பதை, அரசு சரி செய்ய வேண்டும்.'டவுட்' தனபாலு: பெண்களுக்கு நிதியுதவி, திருமணத்தின் போது தாலிக்கு தங்கம், 'ஸ்கூட்டி' போன்றவை எல்லாம் வழங்கப்படுகின்றன; வரவேற்கப்பட வேண்டிய விஷயங்கள் தான். அதே நேரத்தில், அந்த நிதியுதவி, தாமதமாக வழங்கப்படுவதாக கூறும், தி.மு.க., - எம்.எல்.ஏ., 'பெண்களை சொந்த காலில் நிற்க வைக்க, திறன் மேம்பாடு மற்றும் பிற வாய்ப்புகளை, அரசு ஏற்படுத்த வேண்டும்' என, வலியுறுத்த மறந்து விட்டாரோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது; அது தானே, பெண்களுக்கு அவசியம்.

மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர், நடிகர் கமல்: இயந்திரமான வாழ்க்கையில் இருந்து, காலத்தின் கட்டாயத்தால், ஒரு சின்ன இடைவெளி கிடைத்துள்ளது. எனவே, வீட்டிலேயே பத்திரமாக இருங்கள். 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என படித்ததை, வழக்கத்திற்கு கொண்டு வரும் நேரம் இது!'டவுட்' தனபாலு: மாநிலத்தின் பிற அரசியல் தலைவர்கள் எல்லாம், 'கொரோனா'வுக்கு பயந்து, எந்த அறிக்கையும் கொடுக்காமல், வீட்டில் முடங்கி, அவரவர் சொந்த வேலைகளை பார்த்துக் கொண்டிருந்த வேளையில், நீங்களும், பா.ம.க., நிறுவனர் ராமதாசும், மக்களின் அறிக்கை பசிக்கு தீனி அளித்துள்ளீர்கள். எனினும், உங்களின் பேச்சு, மக்களுக்கு, 'டவுட்'டே இல்லாமல், ஆறுதல் அளிக்கத் தான் செய்யும்.

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக, மாநில அரசு, 60 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த தொகை போதாது. இந்தப் பணிகளுக்காக, 500 அல்லது, 1,000 கோடி ரூபாயை ஒதுக்கினால் கூட தவறில்லை. 'டவுட்' தனபாலு: உங்கள் கோரிக்கை நியாயமானது தான். கொரோனா தடுப்புக்கு, 60 கோடி ரூபாய், எந்த மூலைக்குத் தாங்கும்... என்ற, 'டவுட்' மக்கள் மத்தியில் உள்ளது. குறைந்தபட்சம், 1,000 கோடி ரூபாயை ஒதுக்கினால் தான், இந்தப் பிரச்னையிலிருந்து, நீண்ட காலத்திற்கு விடுபட முடியும். அதனால், அரசுக்கு கை கொடுக்கும் விதத்தில், பெரிய அரசியல் கட்சிகள், தங்கள் கட்சி பணத்திலிருந்து நிதியுதவி வழங்குமோ என்ற எதிர்பார்ப்பும் மக்களுக்கு உள்ளதுl

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X