சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

ராகுல் தலையீட்டால் கட்சி உருப்படாது என குமுறிய பிரமுகர்!

Added : மார் 22, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
 ராகுல் தலையீட்டால் கட்சி உருப்படாது என குமுறிய பிரமுகர்!

''சட்டசபையில, தங்களது பெருமையை, போட்டி போட்டு பேசி, பதிவு செய்துட்டாங்க பா...'' என, பெஞ்ச் விவாதத்தை ஆரம்பித்தார், அன்வர்பாய்.''விளக்கமா சொல்லுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''திருச்செந்துார், தி.மு.க., - எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன், சமீபத்துல சட்டசபையில பேசுறப்ப, 'துாத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்துல, 'இஸ்ரோ' ராக்கெட் ஏவுதளம் அமைக்க, 2010ல, அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங், மத்திய அமைச்சர் நாராயணசாமி மூலமா, தி.மு.க., ராஜ்யசபா, எம்.பி., கனிமொழி முயற்சி எடுத்தாங்க'ன்னு சுட்டிக்காட்டினாரு பா...''உடனே பதிலடி தந்த முதல்வர், இ.பி.எஸ்., 'தமிழகத்துல, ராக்கெட் ஏவுதளம் அமைக்கணும்'னு, பிரதமர் மோடியிடம் நான் தான் கோரிக்கை வைச்சேன்... அதை ஏற்று தான், அங்க ராக்கெட் ஏவுதளம் அமைக்கப் போறாங்க'ன்னு சொன்னாரு பா...'' என்றார், அன்வர்பாய்.''நல்லது நடந்தா சொந்தம் கொண்டாடுறதும், கெட்டது நடந்தா, எதிர்க்கட்சி மேல பழி போடுறதும், திராவிடக் கட்சிகள் அரசியல்ல புதுசு இல்லையேங்க...'' என்ற அந்தோணிசாமி,

''மீன்வளத் துறை அதிகாரிகள் மேல கடுப்புல இருக்காங்க...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார்.''எந்த ஊருல வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.''மீன்வளத்தை பாதுகாக்கணும்னு, 1983ல இரட்டை மடி, சுருக்குமடி வலைகளுக்கு தடை விதித்து, அரசாங்கம் உத்தரவு போட்டதுங்க... நாகை மாவட்டத்துல, இந்த வலைகளை வச்சு, 10 வருஷங்களா மீனவர்கள் மீன் பிடிக்கிறாங்க...''இதுக்கு ஆதரவாகவும், எதிராகவும் மீனவர்கள் திரண்டு மோதிக்கிறாங்க... இதனால, சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படுதுங்க... 'இரட்டை மடி, சுருக்குமடி வலைகளுக்கு எதிரா நடவடிக்கை எடுக்க வேண்டிய மீன்வளத் துறையினர், இவ்வளவு வருஷங்களா வேடிக்கை பார்த்துட்டு, இப்ப நடவடிக்கை எடுக்கிறோம்னு, 'பாவ்லா' காட்டுறது தான் பிரச்னைக்கு காரணம்'னு, மீனவர்கள் தரப்பு குற்றம் சாட்டுதுங்க...''அதோட, 'இந்த வலைகளுக்கு தடை விதிக்கிறதால, பாதிக்கப்படுற மீனவர்களுக்கு மாற்று தொழிலுக்கு மீன்வளத்துறை ஏற்பாடு செய்யணும்'னு சொல்றாங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''ராகுல் தலையீடு இருக்கிற வரைக்கும் கட்சி உருப்படாதுன்னு சொல்லிட்டு வந்துட்டாரு வே...'' என, கடைசி தகவலுக்கு மாறினார், அண்ணாச்சி.''யார் ஓய் அது...'' எனக் கேட்டார், குப்பண்ணா.''தமிழக காங்கிரசின் மூத்த தலைவர் ஒருத்தர், சமீபத்துல, டில்லியில மேலிட தலைவர் ஒருத்தரை பார்த்து பேசியிருக்காரு...''அப்ப, தி.மு.க., கூட்டணியில, ராஜ்யசபா எம்.பி.,யை, காங்கிரசுக்கு வாங்காம விட்டது பெரிய தப்பு... அடுத்து வர்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், சட்டசபை தேர்தல்கள்ல, தி.மு.க.,விடம் கறாரா நடந்துக்கணும்னு சொல்லியிருக்காரு வே...''மேலிட தலைவரும், 'ராகுல் கவனத்துக்கு கொண்டு போய், அவர் முடிவு செய்வார்'னு சொல்லியிருக்காரு... ''இதைக் கேட்ட தமிழக தலைவர் வெறுத்து போய், 'ராகுல் தலையீடு இருக்கிற வரை, நம்ம கட்சிக்கு எதிர்காலமே இல்லை... இதை நான் சொன்னதாகவே, அவர்கிட்ட சொல்லுங்க'ன்னு சொல்லிட்டு விருட்டுன்னு எழுந்து வந்துட்டாரு வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
23-மார்-202020:55:22 IST Report Abuse
அசோக்ராஜ் வின்சி ஏன் கல்யாணம் செஞ்சுக்க மாட்டேன்றான்? இத்தாலிய சோசியருங்க பரிகாரம் சொல்ல மாட்டாங்களா? தானும் கெட்டு குடும்பத்தையும் கெடுத்து கட்சியையும் கவிழ்த்து ... துக்கிரி ஜாதகம்.
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
23-மார்-202005:24:14 IST Report Abuse
 nicolethomson ராகுல் இருக்குற வரை கட்சியே உருப்படாது
Rate this:
Share this comment
மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி
23-மார்-202009:16:47 IST Report Abuse
மூல பத்திரம் நல்ல தான் சொல்லியிருக்கின்றார்...
Rate this:
Share this comment
Vel - Chennai,இந்தியா
23-மார்-202010:46:51 IST Report Abuse
Velராகுல் இருக்குற வரை நாடே உருப்படாது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X