சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : மார் 22, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 பேச்சு, பேட்டி, அறிக்கை

'எல்லாரும் பாராட்டும் போது, நீங்கள் மட்டும் எதிர்த்தால் தான், ஊடகங்களில் பார்வை உங்கள் மீது விழும் என்ற நம்பிக்கையோ...' என, கேட்கத் துாண்டும் வகையில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை பேச்சு: மாநில அரசு நிறைவேற்றிய தீர்மானங்களை செல்லாததாக ஆக்கும் வகையில், மத்திய அரசு சில சட்ட திருத்தங்களை செய்கிறது. இது, மத்திய அரசின், மாற்றாந்தாய் மனப்பான்மையை காட்டுகிறது. எம்.பி.,யாக நான் இருந்த போது, மத்திய அரசு நிறைவேற்ற துடித்த ஒரு திட்டத்தை எதிர்த்து பேசினேன்; ஜெ.,க்கு கடிதம் எழுதினேன்.

'முதல்வருக்கு நீங்கள் ரொம்பவும் தான் முட்டு கொடுக்கிறீர்கள்...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழக வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் பேட்டி: சீனாவில், கொரோனா வைரஸ் பரவத் துவங்கியதை அறிந்ததும், முதல்வர், இ.பி.எஸ்., தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் துவங்கி விட்டார். இப்போது, தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள், கொரோனாவுக்கு தடுப்பு அரண் போல அமைந்து விட்டன.

'எந்த விதத்திலாவது, பிரதமர் மோடியை கண்டித்து விட வேண்டும் என்ற உங்களின், 'நல்ல' எண்ணம் தெரிகிறது...' என, கிண்டலாக கூறத் தோன்றும் வகையில், முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் அறிக்கை: கொரோனா தடுப்பு குறித்து, மாநில முதல்வர்களுடன், பிரதமர் மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் பேசியது, ஒருங்கிணைந்த திட்டமாக தெரியவில்லை. இந்த விஷயத்தில், உலக நாடுகளைப் பார்த்து, அந்த நாடுகள் எடுக்கும் முயற்சிகளை பின்பற்றும் வகையில் தான் உள்ளோம்.

'மிகுந்த முன்யோசனைக்காரராக இருப்பார் போலிருக்கிறதே...' என, எண்ணத் தோன்றும் வகையில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ அறிக்கை: கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ள வளர்ந்த, அமெரிக்கா, இத்தாலி போன்ற நாடுகளிலேயே, மருத்துவக் கருவிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நம் நாட்டிலும் அத்தகைய நிலைமை ஏற்படாமல் தடுக்க, மத்திய அரசு முன்னெச்சரிக்கையாக, அந்த கருவிகளை வாங்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

'தொழில் நிறுவனங்களுக்கு எதிராக கொடி பிடிக்கும் நீங்கள் தான், இப்போது, அந்த நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் குரல் கொடுக்கிறீர்கள்...' என, கிண்டல் செய்யத் தோன்றும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் அறிக்கை: கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பயந்து, தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அவற்றின் நிதி ஆதாரங்கள் குறைந்துள்ளன. இதனால், மூடப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு, மின் கட்டண விலக்கு அளிக்க வேண்டும்.

'உண்மை தான். பசியுடன் ஒருவர் கூட இருக்கக் கூடாது; பசியாற்றுவது நம் கடமை...' என, உணர்த்த வைக்கும் வகையில், 'ஈஷா' யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் அறிக்கை: வைரஸ் தாக்குதலால், உலக பொருளாதாரம் மிகப் பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது. தினக்கூலி தொழிலாளர்களுக்கு வருமானம் பாதிப்படைந்துள்ளதால், அவர்களுக்கு உணவு கிடைப்பது சிரமமாகியுள்ளது. அவர்களுக்கு உணவு வழங்குவது இந்த சமூகத்தின் பொறுப்பு. அனைவரும் இதில் பங்கேற்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
23-மார்-202011:54:28 IST Report Abuse
Swaminathan Chandramouli இவர்கள் எல்லோருமே வெறும் வாயால் வடை சுடுபவர்கள். கொரோனா வைரஸால் நாடு கஷ்ட பட்டு கொண்டு இருக்கும் நிலையில் அதற்கு தீர்வு காணும் முறையில் யோசனை செய்யாமல் எரிகிற வீட்டில் பிடிங்கினது லாபம் என்று அவசர நிலையை மதிக்காமல் குற்றம் சொல்ல மட்டும் துடிக்கிறார்களே இவர்களை என்ன செய்ய
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X