பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : மார் 22, 2020
Share
Advertisement
 இதே நாளில் அன்று

இதே நாளில் அன்று
மார்ச் 23, 1893
கோயம்புத்துார் மாவட்டம், கலங்கல் கிராமத்தில் பிறந்தவர், கோபால்சாமி துரைசாமி நாயுடு என்ற, ஜி.டி.நாயுடு. தொடக்கக் கல்வி மட்டுமே பயின்றார். அதன் பின், புத்தகங்களை படித்து, அறிவை வளர்த்துக்கொண்டார்.தொழில் துறையில் ஆர்வமுள்ள இவர், ஸ்டேன்ஸ் என்பவரிடம், ஒரு பேருந்தை கடனாகப் பெற்று, பொள்ளாச்சி - பழநி இடையே இயக்கினார். பின், 'யுனைடெட் மோட்டார் சர்வீஸ்' நிறுவனத்தை துவங்கினார்.பேருந்து புறப்படும் நேரத்தைக் காட்டும் கருவி, பயணச்சீட்டு வழங்கும் கருவி, இன்ஜின் அதிர்வைக் கண்டறியும் கருவி என, பல பொருட்களை உருவாக்கினார்.இவர் கண்டுபிடித்த சவரக்கத்தி, பிளேடு ஆகியவற்றை தயாரிக்கும் உரிமையை, பல நாடுகள் கேட்டும் மறுத்தார். இந்தியாவிலேயே தயாரிக்க, அப்போதைய, பிரிட்டிஷ் அரசு நிதி வழங்க மறுத்ததால், ஒரு அமெரிக்க நிறுவனத்துக்கு, இலவசமாகவே அந்த உரிமையை கொடுத்தார்.இவர் உருவாக்கிய, அதிசய பருத்திச் செடிக்கு, 'நாயுடு காட்டன்' என பெயரிட்டு, ஜெர்மன் கவுரவித்தது. பொறியியல் கல்லூரிகள், தொழிற்சாலைகளைத் துவங்கினார். 1974 ஜன., 4ம் தேதி காலமானார்.'இந்தியாவின் எடிசன்' ஜி.டி.நாயுடு பிறந்த தினம் இன்று!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X