அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வர் நிவாரண நிதி தி.மு.க., - எம்.பி.,எம்.எல்.ஏ.,க்கள், ஒரு மாதச் சம்பளத்தை வழங்குவர்

Updated : மார் 23, 2020 | Added : மார் 22, 2020 | கருத்துகள் (22)
Share
Advertisement
சென்னை:'கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளால் அமைப்பு சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.இவர்களுக்கு உதவும் வகையில், தி.மு.க., - எம்.பி.,க்கள், - எம்.எல்.ஏ.,க்கள், தங்களின் ஒரு மாதச் சம்பளத்தை, முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குவர்' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் அறிவித்துள்ளார்.அவரது அறிக்கை:கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளால்,
 முதல்வர், நிவாரண நிதி,தி.மு.க.,  எம்.பி,அமைப்பு_சாரா தொழிலாளர்கள்

சென்னை:'கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளால் அமைப்பு சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு உதவும் வகையில், தி.மு.க., - எம்.பி.,க்கள், - எம்.எல்.ஏ.,க்கள், தங்களின் ஒரு மாதச் சம்பளத்தை, முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குவர்' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் அறிவித்துள்ளார்.அவரது அறிக்கை:

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளால், தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு உதவ தி.மு.க., முடிவு செய்துள்ளது. தி.மு.க., - எம்.எல்.ஏ., க்கள், லோக்சபா, ராஜ்யசபா எம்.பி.,க்கள், தங்களின் ஒரு மாதச் சம்பளத்தை, முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்குவர். தமிழக அரசும், உடனே போதிய நிதி ஒதுக்கி, அமைப்பு சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற முன் வர வேண்டும். தமிழகத்தில் உள்ள தொழிலதிபர்களும், இந்த மனித நேய முயற்சியில், தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக, தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என, சட்டசபையில் நான் வலியுறுத்தியதை, மீண்டும் வலியுறுத்துகிறேன்.கொரோனா தொடர்பாக, மத்திய, மாநில அரசுகள் வெளியிடும், சுய ஊரடங்கு உள்ளிட்ட, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும், மக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.மிகுந்த விழிப்புணர்வுடனும், சுய சுகாதாரத்தை கடைப்பிடித்தும், கொரோனா தொற்று நோய் பரவலை முழுமையாக தடுத்திட வேண்டும்.இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.


தொழிலாளர்களுக்கு உதவி

தி.மு.க., மகளிர் அணி நிர்வாகிகளுக்கு, கனிமொழி அனுப்பியுள்ள கடிதம்:கொரோனா அச்சுறுத்தலால், தினக்கூலிகளாக வேலை செய்தவர்களின், அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ளது. எனவே, ஆட்டோ டிரைவர்கள், சாலையோர உணவகங்களில் உழைப்பவர்கள் போன்றோருக்கு, உதவுவது நம் கடமை. தி.மு.க., மகளிர் அணியினர், அவர்களுக்கு பணம் அல்லது அத்தியாவசிய பொருட்கள் கொடுத்து உதவ வேண்டும். இதற்காக, நிகழ்ச்சிகள் நடத்தவோ அல்லது கூட்டம் கூட்டவோ தேவையில்லை.அவரவர், தங்களால் இயன்ற உதவிகளை செய்தால் போதும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், கனிமொழி, தன் சொந்த பணத்தை, துாத்துக்குடி லோக்சபா தொகுதியில் அடங்கிய ஆட்டோ டிரைவர்கள், பூ விற்கும் பெண்கள், டிபன் கடை நடத்தும் தள்ளுவண்டி வியாபாரிகளுக்கு உதவித்தொகையாக வழங்கினார்.அவரை தொடர்ந்து, மாவட்ட வாரியாக, மகளிரணியினரும், தாங்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கி வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krishna -  ( Posted via: Dinamalar Android App )
23-மார்-202019:37:24 IST Report Abuse
krishna Sudalai khan oorai adichu serthu vaithulla latcham kodigalil oru pathu sadham koduthale podhum indhia muzhuvadhum Corona nivaranam kodukkalam.Seivara indha moola pathiram sudalai khan.Aamam un pakisthanla coronavam adharkkuun Mp MLA kkal irandu masa sambalamavadhu kodu illai namma moorga payaluga unakku vottu podamattanuga.
Rate this:
Cancel
Raju.c yadav - Doha,கத்தார்
23-மார்-202018:33:48 IST Report Abuse
Raju.c yadav திராவிட திருடர்களின் சாராய ஆலைகளில் ஹாண்ட் சனிட்டிஸிர் தயாரித்து இலவசமாக கொடுக்கலாமே
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
23-மார்-202018:28:09 IST Report Abuse
Endrum Indian உங்கள் ஒரு மாத சம்பளம் என்ன ரூ 1 கோடியா இல்லை ரூ 100 கோடியா ஒரு சினிமாவிற்கு ரஜினி போல???இல்லையல்லவா உங்கள் சம்பளம் வெறும் ரூ 50,000 + இதர ரூ 85,000 ???வெறும் சம்பளம் ரூ 50,000 இதைத்தான் இவர்கள் கொடுக்கப்போகின்றார்கள். டாஸ்மாக் நாட்டில் 234 X 0.5 lakhs = 117 லட்சம் = ரூ 1.17 கோடி யாருக்காக 8.4 கோடி மக்களுக்காக அப்போ ஒருத்தனுக்கு வெறும் ரூ 7.5 வெளங்கிடும் உங்க தாராள மனம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X