பொது செய்தி

இந்தியா

அத்தியாவசிய பணிகள் பட்டியலில் செய்திதாள்

Updated : மார் 22, 2020 | Added : மார் 22, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

புதுடில்லி: அத்தியாவசிய பணிகள் பட்டியலில் செய்திதாள்களையும் சேர்த்து மத்திய அரசின் சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.



latest tamil news



உலகம் முழுவதும் கொரோனா வரைஸ் அச்சுறுத்தல் நிலவி வருகிறது. லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவில் இது நாள் வரையில் 7 பேர் பலியாகி உள்ளனர். 370க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அத்தியாவசிய பணிகள் குறித்த பட்டியலில் செய்திதாள் சேர்க்கப்பட்டுள்ளது.


latest tamil news



மேலும் போலீஸ், சுகாதாரம், தீயணைப்புதுறை, சிறைத்துறை, பொது விநியோகத்துறை , மின்சாரம், தண்ணீர், மாநகராட்சி பணிகள், சம்பளகணக்கு அலுவலக பணிகள், ஊடகத்துறை, வங்கி பணிகள், தகவல் தொடர்பு , தபால்துறை, இன்டர்நெட், உணவு மற்றும் மருத்துவ பணிகள், பெட்ரோல் பங்குகள், உற்பத்தி மற்றும் விநியோகத்துறை ஆகியவை அத்தியாவசிய பொருட்கள் பட்டியிலில் சேர்க்கப்பட்டுள்ளது. கொரோனாவை முன்னிட்டு ஊரடங்கு பின்பற்றப்படும்போது இந்த பட்டியலில் உள்ள அத்தியாவசிய தேவைகளுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பதற்காக இப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathiamoorthy.V - Kalpakkam,இந்தியா
23-மார்-202011:42:38 IST Report Abuse
Sathiamoorthy.V இந்த காலத்தில் டிவி மொபைல் இன்டர்நெட் மூலம் தகவல்கள் கிடைக்கும் சமயம் கையால் தொட்டு படிக்க கூடிய பேப்பர் தேவையா ? பத்திரிக்கை அலுவலகத்தில் இருந்து பேப்பர்களை எத்தனை பேர் கையாள்கிறார்கள் . டிஜிட்டல் மயமான இந்த கால கட்டத்தில் தற்காலிகமா தவிர்க்கலாமே
Rate this:
Share this comment
Muruga Vel - Mumbai,இந்தியா
23-மார்-202013:42:22 IST Report Abuse
 Muruga Velகாய்கறி வாங்கினா நியூஸ் பேப்பர்ல மடிச்சு தராங்க ..பிளாட்டிங் பேப்பரா உபயோகிக்கலாம் … இன்னமும் நிறைய அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுகிறது ......
Rate this:
Share this comment
Cancel
23-மார்-202010:36:23 IST Report Abuse
ஆப்பு செய்தித்தாள்களின் பணி மகத்துவமானது. உண்மையை, நடுநிலையுடன் எழுதணும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X