பொது செய்தி

இந்தியா

ஓட்டலில் 150 அதிகாரிகள்: ரிசர்வ் வங்கி ரகசிய பணி

Updated : மார் 24, 2020 | Added : மார் 22, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
 ஓட்டல் ,150 அதிகாரிகள், ரிசர்வ் வங்கி, ரகசிய பணி

மும்பை:உலகையே அச்சுறுத்தும் கொரோனாவால், நிதிப் பரிவர்த்தனைகள் பாதிக்கப்படாமல் இருக்க, ரிசர்வ் வங்கி, 150 அதிகாரி களை, ஓட்டல் ஒன்றில் ரகசியமாக தங்க வைத்து, பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இது குறித்து, வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது:நெருக்கடி நேரத்தில், நிதிப் பரிவர்த்தனைகள் பாதிக்கப்படாமல் இருக்க, ரிசர்வ் வங்கி எப்போதும் மாற்று திட்டத்தை தயாராக வைத்திருக்கும்.


பரிவர்த்தனை

தற்போது, கொரோனாவால், மக்கள் ஊரடங்குக்கு, மக்கள் தயாராகி வருகின்றனர். இதையடுத்து, மின்னணு முறையில் வங்கிப் பரிவர்த்தனைகள் அதிக அளவில் நடைபெறும். அப்போது, 'சர்வர்' தடையின்றி இயங்கி, 24 மணி நேரம் பணப் பட்டுவாடா மேற்கொள்ள வசதியாக, அவசர கால மாற்று திட்டத்தை, ரிசர்வ் வங்கி, கடந்த, 19ம் தேதி முதல் செயல்படுத்தி வருகிறது.

ஓட்டல் ஒன்றில், ரிசர்வ் வங்கியின் மிக முக்கிய பொறுப்புகளில் உள்ள, 37 அதிகாரிகள் உள்ளிட்ட, 150 பேர், நிதிச் செயல்பாடுகள் சீராக நடைபெறுவதற்கான பணிகளில், ரகசியமாக ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன், உணவு தயாரிப்பு, பராமரிப்பு உள்ளிட்ட பணிகளில், ஓட்டல் ஊழியர்கள், 69 பேர் பணியாற்றி வருகின்றனர். வங்கி ஊழியர்கள் இரு பிரிவுகளாக பிரிந்து, செயல்படுகின்றனர். 150 பேர், அன்றாட நிதிப் பரிவர்த்தனைகள், கடன் நிர்வாகம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கின்றனர்.


உத்தரவு

எஞ்சியோர், 'டேட்டா' எனப்படும் தகவல்களை பாதுகாத்து, பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இது தவிர, தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சாராத பணிகளுக்கு, மூன்றாம் நபர் சேவை நிறுவனங்களைச் சேர்ந்த, 600 பேர், தனியாக தகவல் மையங்களில் செயல்பட்டு வருகின்றனர். ரிசர்வ் வங்கியில், 14ஆயிரம் ஊழியர்கள் உள்ளனர். அவர்களில், மூத்த நிர்வாகிகள் தவிர்த்து, பிற ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
shoba -  ( Posted via: Dinamalar Android App )
23-மார்-202018:31:54 IST Report Abuse
shoba This is called "Room pottu think pandradhu"
Rate this:
Cancel
23-மார்-202018:10:24 IST Report Abuse
ஆப்பு பாவம்... அவிய்ங்களுக்கு கொரோனா பாதுகாப்பு குடுங்க.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
23-மார்-202015:34:34 IST Report Abuse
Girija இது பேரிடர் மேலாண்மை யின் ஒருபகுதி (டிசாஸ்டர் ரெகவரி மேனேஜ்மென்ட் ) தேவைப்படுகிறதோ இல்லையோ இந்த கட்டமைப்பு நிறுவி இருக்கவேண்டும் அதேபோல் கண்ணாடி பிம்பம் போல் அனைத்து தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் நிறுவப்பட்டு அட்டிட்டார்கள் முன் ஒவ்வொரு ஆண்டும் ஒத்திகை செய்துகாட்டி ஒப்புதல் பெறவேண்டும். அந்த இடத்திற்கு தான் இப்போது ரிசர்வ் வங்கி தன் அலுவலர்களை அனுப்பியுள்ளது. கொரோனா நிகழ்வு சரியானதும் இந்த இடம் ரகசியம் கருதி வேறு இடத்திற்கு மாற்றப்படும். இத்தனைக்கும் இது ஒருபகுதி விவரம் தான் மும்பைக்கு மட்டும், இதேபோல் பிற பகுதிகளில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு அந்தந்த மாநிலங்களில் வேறு இடங்களில் இருந்து செயல்படுவர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X