பொது செய்தி

தமிழ்நாடு

என் பதிவு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது: ரஜினி

Updated : மார் 23, 2020 | Added : மார் 22, 2020 | கருத்துகள் (33)
Share
Advertisement
சென்னை:'நான் வெளியிட்ட வீடியோ பதிவு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதால் டுவிட்டரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது' என ரஜினி கூறியுள்ளார்.கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு ஆதரவு தெரிவித்து நடிகர் ரஜினி டுவிட்டரில் வீடியோ பதிவை வெளியிட்டிருந்தார்.அப்பதிவு விதிமுறையை மீறியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு சில மணி நேரத்தில் டுவிட்டர்
 என் பதிவு, தவறாக, புரிந்து, கொள்ளப்பட்டது, ரஜினி

சென்னை:'நான் வெளியிட்ட வீடியோ பதிவு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதால் டுவிட்டரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது' என ரஜினி கூறியுள்ளார்.

கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு ஆதரவு
தெரிவித்து நடிகர் ரஜினி டுவிட்டரில் வீடியோ பதிவை வெளியிட்டிருந்தார்.அப்பதிவு
விதிமுறையை மீறியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு சில மணி நேரத்தில் டுவிட்டர் நிர்வாகத்தால் நீக்கப்பட்டது.இதுகுறித்து டுவிட்டர் பதிவில் ரஜினி கூறியிருப்பதாவது:

நேற்று வெளியிட்ட வீடியோ பதிவில் '12 - 14 மணி நேரம் மக்கள் வெளியில் நடமாடாமல்
இருந்தாலே கொரோனா வைரஸ் பரவுவது தடைபட்டு மூன்றாம் நிலைக்கு செல்வது
தவிர்க்கப்படலாம்' என நான் கூறியிருந்தேன்.இதனால் 'இன்று மட்டும் அப்படி இருந்தாலே போதும்' என பரவலாக புரிந்து கொள்ளப்பட்டு அதிகம் பகிரப்பட்டது. இதனால் அப்பதிவை டுவிட்டர் நிர்வாகம் நீக்கியுள்ளது.

நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர அரசு பரிந்துரைக்கும் காலம் வரை இன்று போல சுய தனிமைப்படுத்துதலை நாம் கவனமாக பின்பற்றி இந்த கொடிய வைரசை வீழ்த்தும்
முயற்சியில் கவனம் செலுத்துவோம்.இந்த நேரத்தில் என் வீடியோவின் நோக்கத்தை புரிந்து ஆதரித்து மக்களிடம் அப்பதிவை சரியான முறையில் எடுத்துச் சென்ற அனைவருக்கும் நன்றி.

இவ்வாறு ரஜினி கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
துயில் விரும்பி - coimbatore,இந்தியா
23-மார்-202023:58:10 IST Report Abuse
துயில் விரும்பி this fellow has to be quarantied for ever. He has become a burden for tamil nadu, india and creating nuesense.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
23-மார்-202023:02:25 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் யோசிக்காமே ஜால்றா தட்டுனா இப்படித்தான்.
Rate this:
Cancel
s vinayak - chennai,இந்தியா
23-மார்-202019:51:22 IST Report Abuse
s vinayak Twitter தமிழர்கள் மட்டும் தொடர்பவர்கள் என்று ரஜினி நினைத்து விட்டார். மறுப்பு தெரிவிப்பது மறுவிளக்கம் தருவது இவரது வாடிக்கை. கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் இருந்தே இவர் இப்படித்தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X