தாழ்வழுத்த பிரிவு மின்சாரம் 150 கி.வா., ஆக உயர்கிறது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தாழ்வழுத்த பிரிவு மின்சாரம் 150 கி.வா., ஆக உயர்கிறது

Added : மார் 22, 2020
Share
தாழ்வழுத்த பிரிவில் வழங்கப்படும், மின் திறன் அளவை, அதிகபட்சமாக, 150 கிலோ வாட்டாக அதிகரிக்கும் வகையில், புதிய விதிகளை ஏற்படுத்துவது தொடர்பாக, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிசீலித்து வருகிறது.தமிழக மின் வாரியம், தாழ்வழுத்தம், உயரழுத்தம் ஆகிய பிரிவுகளில், மின் இணைப்பு வழங்குகிறது. தாழ்வழுத்த பிரிவில், வீடுகள், விவசாயம், குறு, சிறு தொழிற்சாலைகள், அரிசி ஆலைகள்

தாழ்வழுத்த பிரிவில் வழங்கப்படும், மின் திறன் அளவை, அதிகபட்சமாக, 150 கிலோ வாட்டாக அதிகரிக்கும் வகையில், புதிய விதிகளை ஏற்படுத்துவது தொடர்பாக, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிசீலித்து வருகிறது.

தமிழக மின் வாரியம், தாழ்வழுத்தம், உயரழுத்தம் ஆகிய பிரிவுகளில், மின் இணைப்பு வழங்குகிறது. தாழ்வழுத்த பிரிவில், வீடுகள், விவசாயம், குறு, சிறு தொழிற்சாலைகள், அரிசி ஆலைகள் உள்ளிட்டவை இடம்பெறுகின்றன.இந்த பிரிவில், அதிகபட்சம், 112 கி.வா., திறன் வரை, மின் இணைப்பு வழங்கப்படுகிறது. அதற்கு மேல் சென்றால், உயரழுத்த பிரிவு. அதில், வாகன தொழிற்சாலைகள், தேயிலை தொழிற்சாலைகள், ஜவுளி ஆலைகள், ரயில்வே, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இடம்பெறும்.உயரழுத்த பிரிவில், ஒரு யூனிட் மின்சாரத்திற்கு, 6.35 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது தவிர, வேறு கட்டணங்களும் உண்டு. இதை விட, தாழ்வழுத்த பிரிவுக்கான கட்டணம் குறைவு. அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் உள்ளிட்டோர், தாழ்வழுத்த பிரிவில் வழங்கப்படும் அதிகபட்ச மின் திறன் அளவை உயர்த்தும்படி, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தை வலியுறுத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக, ஆணையம் வரைவு அறிக்கையை வெளியிட்டு, பலரிடமும் கருத்துக்களை கேட்டுள்ளது. இதையடுத்து, தாழ்வழுத்த பிரிவில் வழங்கப்படும், அதிகபட்ச மின் திறன் அளவை, 150 கி.வா., திறனுக்கு அதிகரிப்பது குறித்து, பரிசீலித்து வரும் ஆணையம், அதுதொடர்பான, புதிய விதிகளை விரைவில் வெளியிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
-- நமது நிருபர் --

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X