சோதனை சாவடிகள் எல்லைகளில் அதிகரிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சோதனை சாவடிகள் எல்லைகளில் அதிகரிப்பு

Added : மார் 22, 2020
Share

சென்னை:''கொரோனா தொற்றை தடுக்க, மாநில எல்லைகளில் சோதனை சாவடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன,'' என, வருவாய் துறை அமைச்சர், உதயகுமார் தெரிவித்தார்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில், நேற்று அமைச்சர்கள் உதயகுமார், ஜெயகுமார், வருவாய் நிர்வாக ஆணையர், ராதாகிருஷ்ணன், சென்னை மாவட்ட கலெக்டர், சீதாலட்சுமி ஆகியோர் ஆய்வு செய்தனர்.பின், அமைச்சர் உதயகுமார் கூறியதாவது:மாநில எல்லைகளில், அனைத்து வாகனங்களும் கண்காணிக்கப்படுகின்றன. இதற்காக, சோதனை சாவடிகள் எண்ணிக்கை, 86ல் இருந்து, 101 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.பால் பொருள் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன. மற்ற வாகனங்களை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். நோய் தடுப்பு சோதனைகளுக்கு பிறகே, வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், மக்கள் பாதுகாப்போடு இருக்கின்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X