கோர்ட் செய்தி

தமிழ்நாடு

நீண்ட கால, 'சஸ்பெண்ட்' கூடாது: அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்

Added : மார் 22, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை:'அரசு ஊழியர்களை, நீண்ட காலமாக தற்காலிக பணி நீக்கத்தில் வைப்பதை, தவிர்க்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.

தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், கண்காணிப்பாளராக அன்னபூரணி என்பவர் பணியாற்றினார்.இவருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில், ௨௦௧௨ல், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.ஏழு ஆண்டுகளாக இடைநீக்கத்தில் வைத்திருப்பதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், அன்னபூரணி மனு தாக்கல் செய்தார். மீண்டும், பணியில் சேர்க்கவும் கோரியிருந்தார். மனுவில், '௨௦௧௨ல் வழக்குப் பதிவு செய்யப்பட்ட பின், ௨௦௧௪ல் தான், நீதிமன்றத்தில் விசாரணை துவங்கியது.'இன்னும், வழக்கில் முடிவு வரவில்லை. எனவே, சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து, பணியில் சேர்க்க வேண்டும்' என கூறப்பட்டுஉள்ளது.மனுவை விசாரித்த, நீதிபதி, வி.பார்த்திபன் பிறப்பித்த உத்தரவு:ஏழு ஆண்டுகளுக்கும் மேல், தற்காலிக பணி நீக்கத்தில் வைத்திருப்பதால், மனுதாரர் கடுமையான வேதனையை அனுபவித்திருப்பார்.மேலும், கண்ணியமான வாழ்வுரிமையும் பாதிக்கப்பட்டுள்ளது. ஊழல் வழக்கு என்றாலும், விரைந்து விசாரணை நடத்தி, நீதி பெறும் உரிமையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தற்காலிக பணி நீக்கத்தில் வைத்திருந்தாலும், ஜீவனப்படி வழங்கப்பட வேண்டும். எந்த வேலையும் செய்யாமல், இந்த தொகையை, சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஊழியர்கள் பெறுகின்றனர். அரசுக்கும், இது இழப்பு தான். எனவே, நீண்ட காலமாக தற்காலிக பணி நீக்கத்தில் வைப்பதை, தவிர்க்க வேண்டும்.எனவே, சஸ்பெண்ட் உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது. மீண்டும் பணியில் சேர்க்க, உத்தரவிடப்படுகிறது.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
23-மார்-202020:19:50 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN மிகச்சரியான கருத்து. லஞ்சம் வாங்கி இருந்தா சஷ்பெண்ட் தேவை இல்லை வீட்டிற்கே அனுப்பிடனும்.வேலை முடிந்தது. கோர்ட்டுக்கும் வேலை இல்லை. குற்ற வாளிக்கு வாதாடும் வக்கீலுக்கும் வேலை இல்லை.மேட்டர் ஓவர்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X