பொது செய்தி

இந்தியா

கொரோனா உயிரிழப்பு அதிகரிக்கும்: நிபுணர் எச்சரிக்கை

Added : மார் 22, 2020 | கருத்துகள் (35)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா தொற்று சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் நிலையில், புகழ்பெற்ற தொற்றுநோய் நிபுணர், டாக்டர் ரமணன் லக்ஷ்மிநாராயன் 'கொரோனா வைரஸ் பரவல்' குறித்து இந்தியாவில் பிரபல ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி விபரம்:கொரோனா தொற்று நோய்க்கான சோதனையை இந்திய மெடிக்கல் கவுன்சில், நாடு முழுவதும் விரிவுபடுத்தி வருகிறது. ஆனாலும், இந்த

புதுடில்லி: கொரோனா தொற்று சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் நிலையில், புகழ்பெற்ற தொற்றுநோய் நிபுணர், டாக்டர் ரமணன் லக்ஷ்மிநாராயன் 'கொரோனா வைரஸ் பரவல்' குறித்து இந்தியாவில் பிரபல ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி விபரம்:latest tamil news
கொரோனா தொற்று நோய்க்கான சோதனையை இந்திய மெடிக்கல் கவுன்சில், நாடு முழுவதும் விரிவுபடுத்தி வருகிறது. ஆனாலும், இந்த நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற கொடிய நோய்களால் வரும் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை, முன்கூட்டியே தவிர்ப்பது நல்லது. ஏனெனில் நம்மால்(இந்தியர்கள்) நோய் பரவல்களை நிர்வகிப்பது மிகவும் கடினம்.


latest tamil news
நாம் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை இதற்கு முன்பாகவே எடுத்திருக்க வேண்டும். நாம் தவறி விட்டோம். வயதானவர்களை கவனிக்க வேண்டும், மிகவும் வேகமாக பரவும் இந்நோயை எதிர்க்க உடனே தயாராக வேண்டும். கொரோனா வைரஸை அறிவியல் தொடர்புடன் புரிந்து கொள்ள வேண்டும். பயப்பட தேவையில்லை.

உலகில் சில வாரங்களில் கொரோனாவின் பாதிப்பால் 10 சதவீதம் கூடுதலான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.இது ஒரு பேரழிவாக இருந்தாலும். அதற்கு நிச்சயமாக ஒரு முடிவு இருக்கும். யாரும் பீதியடைய தேவையில்லை. ஏனென்றால் இதன் பேரழிவிற்கு ஒரு முற்றுப்புள்ளி நிச்சயம் உண்டு. அனைவரும் மருத்துவமனைக்கு சோதனை செய்துகொள்ள விரைவதால், அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள், ஒரே இடத்தில் கூடுவதால் அவர்களை மிகவும் கவனமாக கையாள வேண்டியது அவசியம்.

1 கோடி பேர் மோசமாக பாதிக்கப்படலாம், 30 முதல் 40 லட்சம் வரையிலான நோயாளிகள் அபாய கட்டத்தில் இருக்கலாம். கொரோனாவால், வரும் ஜூலை மாதத்திற்கு முன்பாக இந்தியாவில் 10 முதல் 20 லட்சம் மக்கள் வரை உயிரிழப்பு ஏற்படலாம். இதிலிருந்து மீள்வதற்கு, குறைந்தது 10 வார காலம் அவகாசம் தேவைப்படும். வழக்கமாக இந்தியாவில் 8 கோடி முதல் 10 கோடி பேர் ப்ளு காய்ச்சலால் பாதிப்படைகின்றனர். அதில் 1 சதவீதம் இறக்கின்றனர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பால், நாம் ஏற்கனவே 100 சதவீதம் 3ம் நிலையில்தான் இருக்கிறோம். தற்போது இறப்பு சதவீதம் 2 முதல் 3 என்ற அளவில் இருக்கிறது. ப்ளு காய்ச்சலை விட 20 அல்லது 30 மடங்கு பாதிப்பு அதிகம். நாம் பேசிக்கொண்டிருக்கும்போதே அது வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. ஜூலைக்கு முன்பாக 30 முதல் 50 கோடி வரை இந்நோயால் பாதிக்கப்படலாம்.

ஊரடங்குகள் மற்றும் வெளியே செல்லாமல் வீட்டில் இருப்பது, ஆகியவை வைரஸ் பரவலுக்கு ஒரு இடைவெளியை ஏற்படுத்தும். ஊரடங்கிற்கு, நாம் இன்னும் மூன்று வாரங்கள் காத்திருந்தால், அது மிகப்பெரிய கால தாமதமாகிவிடும். கொரோனா தொற்றிடம் இருந்து குழந்தைகளை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்ற வழிமுறை சீன மக்களுக்கு நன்கு தெரிந்திருக்கிறது.

இந்தியாவில் அந்த விழிப்புணர்வு இல்லை. இங்கு குழந்தைகளையும், இளைஞர்களையும் பாதுகாக்க வேண்டும். அமெரிக்கா நாடு முழுவதும் ஊரடங்கு முழுமையாக பின்பற்றப்பட்டது. இந்தியாவி்ல் மக்கள் தொகை அதிகம் என்பதால் அது சாத்தியமா என்று தெரியவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ocean kadappa india - kadappa,இந்தியா
27-மார்-202006:15:09 IST Report Abuse
ocean kadappa india நீர் இந்தியாவில் இல்லை. இந்தியரும் இல்லை. பின் எப்படி இந்தியாவில் ஒரு கோடி பேருக்கு கோவிட் 19 தாக்குதல் இருக்கலாம் என்ற பிபிசி செய்தியை ஒருவர் சொன்னதாக இக்கருத்து பலகையில் சுற்றி வளைக்கிறீர்.
Rate this:
Cancel
ocean kadappa india - kadappa,இந்தியா
27-மார்-202006:03:55 IST Report Abuse
ocean kadappa india பிஎச்டி பட்டதாரி எப்படி தொற்று நோய் நிபுணரானார். பூமத்திய ரேகையில் உள்ள ஏசியா கண்டத்தின் இந்திய தென்கோடி குமரி வரை கொரோனாவுக்கு வேலை இல்லை. பூமத்திய ரேகை உஷ்ணத்தை கோடை காலங்களில் அதிகமாக சுட்டெரிக்கும்.இந்தியாவில் கொரானாவை பரப்பியவர்கள் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்தவர்கள்.அவர்கள் வருகையை கட்டுப்படுத்தி விட்டனர்.
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
23-மார்-202011:54:16 IST Report Abuse
Matt P நான் இருக்கிற வூரில் , எந்த வூரடங்கும் இல்லை. யாரும் மாஸ்க் அணிந்து செல்வதை பார்க்கவில்லை. விரும்புபவர்கள் அணிகிறார்கள் .மெக்டொனால்ட் போன்ற துரித உணவு இடங்களில் ஜன்னல் வழி வியாபாரம் மட்டும் தான் buffet எல்லாம் உணவகங்களில் மூடல். டேக் அவுட் மட்டும் தான் பல உணவகங்களில். வீட்டில் இருந்து வேலை செய்யமுடியுமானால், கணினி பயன்படுத்துவர் வீட்டில் இருந்தே வேலை செய்கிறார்கள். போக்குவரத்து எல்லாம் மக்கள் விருப்பப்படியே நடந்து கொண்டு தான் இருக்கிறது. இங்கே எப்போதுமே தாள், கிருமிநாசினி திரவம் பழக்கப்படுத்தி மக்கள் பழகிவிட்டதால் ,அதை அதிகமாக்கி தொடர்கிறார்கள். .நகர நிர்வாகங்கள் தான் தற்போதைய நிலவரத்திற்கேற்ப ,வரைமுறை ஏற்படுத்தி உணவகங்களுக்கு கட்டுப்பாடு விதித்திருக்கிறார்கள். மத்திய அரசால் எந்த வூரடங்கும் இங்கு நடத்தப்படவில்லை. இந்தியாவில் ஜனத்தொகை அதிகமாக இருப்பதால் , அதனால் கூட்டமும் ஏற்படுவதால் மக்களும் அரசாங்கமும் பொறுப்புணர்வோடு இருக்கவேண்டிய கட்டாயம். இந்தியாவில் ஒரு கோடி பேருக்கு covid19 தாக்குதல் இருக்கலாம் என்று பிபிசி செய்தியில் வந்ததாக ஒருவர் சொன்னார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X