அரசியல் செய்தி

தமிழ்நாடு

'பள்ளிகளில் அடிப்படை வசதியை மேம்படுத்துங்க!'

Added : மார் 22, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை:'அரசு மருத்துவ கல்லுாரிகளில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, உள் இடஒதுக்கீடு வழங்கும் திட்டம் வரவேற்கத்தக்கது. அத்துடன், அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

'டுவிட்டர்' பக்கத்தில், அவர் கூறியிருப்பதாவது:தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரை, அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு, அரசு மருத்துவ கல்லுாரிகளில், சிறப்பு உள்ஒதுக்கீடு வழங்க, தமிழக அரசு முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. இதுவே, சமூக நீதி. அரசு பள்ளிகளில் பயிலும் கிராமப்புற ஏழை மாணவர்கள், மருத்துவம் பயில இத்திட்டம் வகை செய்யும். அரசு மருத்துவ கல்லுாரிகளில் சேருவதற்கான உள் ஒதுக்கீட்டு உரிமை, அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமின்றி, அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுக்கும், நீட்டிக்கப்பட வேண்டும். அவர்களும், ஊரக ஏழை, மாணவர்களே; அது தான், முழுமையான சமூக நீதியாக அமையும்.அரசு மருத்துவ கல்லுாரிகளில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, உள் இடஒதுக்கீடு வழங்கும் திட்டத்தால், அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.இதை, மேலும் ஊக்கப்படுத்த, அரசு பள்ளிகளில், கல்வித் தரத்தை உயர்த்தவும், கழிப்பறை, விளையாட்டு திடல் உள்ளிட்ட, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் வேண்டும்.இவ்வாறு, ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mano - Dammam,சவுதி அரேபியா
23-மார்-202014:16:36 IST Report Abuse
Mano எங்கள் ஊர் அரசு ஆரம்ப துவக்க பள்ளியின் பெற்றோர் - ஆசிரியர் சங்க தலைவியாக என் மனைவி இருந்தபோது ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் உதவியோடு பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு தேவையான குடிநீர் வசதி, சத்துணவுக்கு தேவையான காய்கறி தோட்டம் அமைத்தல், விளையாட்டு விழா, குழந்தைகளுக்கு சிறுசேமிப்பு பழக்கம் போன்ற சின்ன சின்ன வேலைகள் செய்து தந்தனர். அதுபோல் இப்போது யாரும் செய்வதில்லை. பெற்றோர்களும், செல்வந்தர்களும் அரசுடன் ஒத்துழைத்து பள்ளிக்கு தேவையானதை தங்களால் இயன்றதை செய்ய வேண்டும் என்று விருப்பப்படுகிறேன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X