கொரோனா விழிப்புணர்வு திருமணம் விஜயகாந்த் வீட்டில் அரங்கேற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா விழிப்புணர்வு திருமணம் விஜயகாந்த் வீட்டில் அரங்கேற்றம்

Added : மார் 22, 2020 | கருத்துகள் (3)
Share
சென்னை:கொரோனா விழிப்புணர்வு திருமணத்தை, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த், நேற்று தன் வீட்டில் நடத்தி வைத்தார். கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்ப, பொது இடங்களிலும், ஒரே இடத்திலும் கூடுவதை தவிர்க்க வேண்டும் என, மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் உத்தரவுப்படி, நேற்று நாடு முழுவதும், மக்கள் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப் பட்டது.இதனிடையே, தே.மு.தி.க.,வின், மாநில
 கொரோனா விழிப்புணர்வு திருமணம் விஜயகாந்த் வீட்டில் அரங்கேற்றம்

சென்னை:கொரோனா விழிப்புணர்வு திருமணத்தை, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த், நேற்று தன் வீட்டில் நடத்தி வைத்தார். கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்ப, பொது இடங்களிலும், ஒரே இடத்திலும் கூடுவதை தவிர்க்க வேண்டும் என, மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் உத்தரவுப்படி, நேற்று நாடு முழுவதும், மக்கள் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப் பட்டது.இதனிடையே, தே.மு.தி.க.,வின், மாநில தொழிற்சங்க துணைசெயலர், வேணுராம் மகன், விமல்ராஜ் என்பவருக்கும், உறவினர் மகள் கமலிக்கும், சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள சமூகநலக் கூடத்தில், நேற்று காலை திருமணம் நடக்க இருந்தது.திருமணத்தை, விஜய காந்த் நடத்தி வைக்க இருந்தார்.

'மக்கள் ஊரடங்கு' உத்தரவை கடைபிடிக்கும் வகையில், இந்த திருமணம், சாலிகிராமத்தில் உள்ள, விஜயகாந்தின் வீட்டிற்கு மாற்றப்பட்டது.அங்கு, மணமக்களின் பெற்றோர் முன்னிலையில், திருமணத்தை விஜயகாந்தும், அவரது மனைவி, பிரேமலதாவும் நடத்தி வைத்தனர். அவர்களுக்கு, காலை உணவு வழங்கப்பட்டது.மணமக்களுக்கு பரிசு பொருட்களையும், சத்தான உணவு பெட்டகத்தையும், விஜயகாந்த் வழங்கினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X