சசி தரூர் மீது கூறிய குற்றச்சாட்டு வாபஸ்: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு

Updated : மார் 24, 2020 | Added : மார் 22, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
 சசி தரூர், குற்றச்சாட்டு, வாபஸ், ரவிசங்கர்_பிரசாத்,  விமர்சிக்க , பிரதமர்

புதுடில்லி:லோக்சபா தேர்தலின் போது, முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சசி தரூரை, 'கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்' என, கூறியதை திரும்பப் பெறுவதாக, மத்திய சட்ட அமைச்சர், ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.


மானநஷ்ட வழக்கு



லோக்சபா தேர்தல், கடந்த ஆண்டு, ஏப்ரல் - மே மாதங்களில் நடந்தது. அப்போது, பிரதமர் மோடியை, சசி தரூர் தரக்குறைவாக விமர்சித்தார்.இதற்கு பதில் அளித்து, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத், 'கொலை வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்டவர் சசி தரூர்' என விமர்சித்தார்.

இதையடுத்து, ரவிசங்கர் பிரசாத் மீது, சசி தரூர், மானநஷ்ட வழக்கு தொடர்நார்.இந்நிலையில், சசி தரூருக்கு, ரவிசங்கர் பிரசாத் எழுதிய கடிதத்தில் கூறியிருந்ததாவது:ஓராண்டுக்கு முன் லோக்சபா தேர்தல் பிரசாரம் சூடுபிடித்திருந்த போது, உங்களை, கொலை வழக்கில் குற்றஞ் சாட்டப்பட்டவர் என, நான் விமர்சித்தேன்.

ஆனால், அதன் பின், அந்த வழக்கு விசாரணையை முழுமையாக படித்த போது, உங்கள் மீது நான் கூறிய குற்றச்சாட்டு தவறு என, உணர்ந்தேன். அதனால், நான் கூறிய குற்றச்சாட்டை, உடனடியாக, எந்த வித நிபந்தனையும் இன்றி, வாபஸ் பெற்றுக் கொள்கிறேன்.


விமர்சனம்



நீங்கள், பிரதமர், மோடியை தரக்குறைவாக விமர்சித்ததால் தான், உங்களை நான் விமர்சிக்க நேரிட்டது. பிரதமர் பற்றி சிலர் கூறிய வார்த்தைகளையே, நீங்களும் கூறினீர்கள். ஆனால், நீங்கள் கூறியதாகத் தான் பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இது பற்றி, நீங்கள் யோசித்தால், நான் கூறுவது உண்மை என தெரியும்; பிரதமர் பற்றி கூறியதை தவிர்த்து இருக்கலாம் என, ஒப்புக் கொள்வீர்கள்,இவ்வாறு கடிதத்தில், ரவிசங்கர் பிரசாத் கூறியிருந்தார்.


வழக்கு வாபஸ்

இதற்கு, சசி தரூர் அனுப்பிய பதிலில் கூறியிருந்ததாவது:நீங்கள் கூறிய வார்த்தைகள், என் மனதை புண்படுத்தியது. எனினும், இப்போது நீங்கள், அந்த வார்த்தைகளை திரும்பப் பெறுவ தாக ஒப்புக் கொண்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதோடு, உங்கள் பெருந்தன்மையைக் காட்டுகிறது. உங்கள் உணர்வுகளை, என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இது தொடர்பாக, நான் தொடர்ந்த வழக்கை, உடனடியாக வாபஸ் பெற, என் வழக்கறிஞர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளேன். இந்த விவகாரம், இத்துடன் முடிந்து விட்டதாக கருதுகிறேன்.இவ்வாறு, சசி தரூர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
24-மார்-202010:47:25 IST Report Abuse
A.George Alphonse மான நஷ்ட வழக்குக்கு பயந்து இவர் உருக்கமான கடிதம் சசி தரூருக்கு எழுதி இவர் பேசியதை வாபஸ் வாங்கியுள்ளார்.இதை செய்ய இவ்வளவு நாட்களா?
Rate this:
Cancel
வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),,இந்தியா
23-மார்-202020:37:40 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு சசி தரூர் நிரபராதி ..... மனைவியின் ஆவியும் மன்னிச்சிருச்சாம்
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
23-மார்-202018:15:19 IST Report Abuse
Endrum Indian "கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்" என்று சொன்னதை திரும்பப் பெறுகின்றேன் அவர் தான் "கொலை செய்தவர்" என்று இப்போது கூறுகின்றேன். என்ன ரவி பிரசாத் சரிதானே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X