பொது செய்தி

தமிழ்நாடு

'அத்தியாவசிய உணவு பொருட்கள் தமிழகம் வர நடவடிக்கை தேவை'

Added : மார் 22, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

சென்னை:'பால், பெட்ரோல் உட்பட, அனைத்து அத்தியாவசிய உணவு பொருட்களும், தமிழகத்திற்கு வர, உடனடியாக நடவடிக்கை தேவை' என, முதல்வருக்கு, தமிழ்நாடு உணவு பொருள் வியாபாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சங்கத்தின் தலைவர், ஜெயப்பிரகாசம், முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதம்:கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில், தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. வரும், 31ம் தேதி வரை, பால், பெட்ரோல் தவிர, இதர பொருட்களை எடுத்து வரும் லாரிகளுக்கு அனுமதி இல்லை என, அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்திற்கு தேவையான அரிசியில் பாதியளவு, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலிருந்து வருகிறது. கோதுமை, உளுந்து, பருப்பு, பாசிப்பருப்பு, துவரம் பருப்பு, பட்டாணி, மக்காச்சோளம், சீரகம், கடுகு, வெந்தயம், முந்திரி உட்பட, பல்வேறு உணவு பொருட்களும், வெளி மாநிலங்களிலிருந்து தான் வருகின்றன.

எண்ணெய்க்கு தேவையான எள், நிலக்கடலை போன்றவைகளும், வட மாநிலங்களிலிருந்தே வருகின்றன. கோரோனா தடுப்பு நடவடிக்கையால், அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும்.இதை கருத்தில் வைத்து, அத்தியாவசிய பொருட்கள், உடனடியாக தமிழகத்திற்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கடிதத்தில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
muthu Rajendran - chennai,இந்தியா
23-மார்-202012:44:26 IST Report Abuse
muthu Rajendran அத்தியாவசிய பொருள்களான உணவுப்பொருள்கள் காய்கறிகள் பால் மருந்துகள் வருவதற்கு தடை இருக்க கூடாது மாவட்டங்கள் சீல் வைப்பு என்றவுடன் ஏற்கனவே தங்களிடம் இருந்த காய்கறிகள் விலையை பன்மடங்கு உயர்த்தி விற்கிறார்கள். அம்மாவாசை என்றால் 5 ரூபாய் வாழைக்காயை 10 ரூபாய்க்கு விற்கும் நபர்கள் தானே வியாபாரிகள். அதனால்தான் நடுத்தர மக்களின் அபிமானத்தை வியாபாரிகள் இழந்து விட்டார்கள். அயல்நாட்டு பானங்களை விற்பதை தவிர்ப்போம் என்றார்கள். செய்தார்களா? இல்லையே.எந்த பற்றும் இல்லாமல் சுய லாபத்தை மட்டுமே நினைப்பவர்கள் பெரும்பாலான வியாபாரிகள் . அமுதம் ரேஷன் கடைகளில் பலசரக்கு காய்கள் விற்க அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். எதெடுத்தாலும் தனியார் மயம் ஆக வேண்டும் என்பவர்கள் யோசிக்க வேண்டிய நேரம் இது
Rate this:
Cancel
muthu Rajendran - chennai,இந்தியா
23-மார்-202011:28:21 IST Report Abuse
muthu Rajendran திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னை மாநகரின் பகுதிகள் உள்ளன எனவே சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதியாக கருதினால் முக்கிய அவசியமான பணியாளர்கள் நகருக்குள் வரமுடியும் அத்தியாவசிய பொருள்கள் ஓரளவு கிடைக்க வாய்ப்பு ஏற்படும் சுகாதார அதிகாரிகள் மருத்துவர்கள் ஆலோசித்து முடிவுகள் எடுக்க அதிகாரம் கொடுக்க வேண்டும். அரசியல் லாபம் நோக்கம் இல்லாது துறை வல்லுநர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கை நடவடிக்கை எடுக்கும் நேரம் இது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X