அரசியல் செய்தி

தமிழ்நாடு

'பிரதமர் பாராட்டு பெருமை தருகிறது'

Added : மார் 22, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
 'பிரதமர் பாராட்டு பெருமை தருகிறது'

சென்னை:'கொரோனாவுக்கு எதிராக மேற்கொண்டுள்ள, சிறப்பான தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக, பிரதமர் பாராட்டியிருப்பது, தமிழக முதல்வருக்கு பெருமை தருகிறது' என, த.மா.கா., தலைவர், வாசன் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:தமிழகத்தில் கொரோனாவுக்கு எதிராக, முதல்வர் எடுக்கும் நடவடிக்கைகள், தமிழக மக்களின் நலன் காக்கும் வகையில் அமைந்துள்ளன.தமிழகத்தின் எல்லைகளை மூட உத்தரவிட்டதும், சுய ஊரடங்கை, அதிகாலை, 5:00 மணி வரை நீட்டிக்க உத்தரவிட்டதும், அரசு பஸ்கள் இயக்கப்படாது என, உத்தரவிட்டதும், துணிச்சலான நல்ல நடவடிக்கைகள்.குறிப்பாக, தமிழகத்தில் கொரோனாவுக்கு எதிராக, முதல்வர் மேற்கொண்டுள்ள சிறப்பான தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக, பிரதமர் பாராட்டியிருப்பது, முதல்வருக்கு பெருமை தருகிறது. எனவே, தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகள், தமிழக மக்களுக்கு நம்பிக்கை அளித்து உள்ளன.இருப்பினும் பொது மக்களும், கைககளை கழுவுதல், தேவையற்ற பயணங்களை தவிர்த்தல் போன்றவற்றை கட்டாயமாக கடைபிடித்து, நோய் தொற்று தடுப்புக்கு, துணை நிற்க வேண்டும்.இவ்வாறு, வாசன் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இருங்கடா - Kitchener,கனடா
23-மார்-202021:41:51 IST Report Abuse
இருங்கடா நீயெல்லா சாப்புடறப்ப என்ன தோணும்?? எத்தனாவரசம ஒண்ணுமே செய்யாம திங்கறது சவுரமாதிரி இல்ல ???
Rate this:
Share this comment
Cancel
karutthu - nainital,இந்தியா
23-மார்-202016:11:46 IST Report Abuse
karutthu மாநிலங்கள் அவை எம் பீ சீட் ஒருவேளை ஜீ கே வாசனுக்கு ஆ தி மு க தராமல் இருந்திருந்தால் எப்படி பேசி இருப்பார் ?
Rate this:
Share this comment
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
23-மார்-202015:22:26 IST Report Abuse
Vijay D Ratnam தேவையில்லாமல் எதற்கு நக்கல். திருட்டு ரயில் கும்பலை பெருமையாக பார்த்தவர்களுக்கு இந்த பரம்பரை கோடிஸ்வரரை பார்த்தால் நக்கலாகத்தான் தெரியும். அந்த உத்தமர் ஜி.கருப்பையா மூப்பனாரின் மகன். இரண்டு முறை மத்திய அமைச்சராக இருந்த ஜி கே வாசன் அளவுக்கு நேர்மையான அரசியல்வாதி ஒரே ஒருத்தர் தமிழ்நாட்டுல இருந்தால் காட்டுங்கள் பார்ப்போம். போட்டிபோட்டுக்கொண்டு மக்களின் பணத்தை கொள்ளையடித்து குவித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் இவர் தூய்மையான லஞ்சம் ஊழல் கமிஷன் எதுவும் அண்டாத மத்திய கப்பல்துறை அமைச்சராக சிறப்பாக செயலாற்றினார். மோடி அவர்களே ஜி கே வாசன் அவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கலாம்.
Rate this:
Share this comment
karutthu - nainital,இந்தியா
23-மார்-202020:12:41 IST Report Abuse
karutthuஇவர் மத்திய அமைச்சராக இருந்த காலத்தில் தமிழ்நாட்டிற்கு என்ன நன்மை செய்தார் என்று கூறமுடியுமா ?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X