அரசியல் செய்தி

தமிழ்நாடு

சட்டசபையை ஒத்தி வையுங்க: துரைமுருகன் அறிவுரை

Added : மார் 22, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

சென்னை:'சட்டசபையை ஒத்திவைத்து, மாவட்டத்திற்கு ஒரு அமைச்சர் சென்று, கலெக்டர்களுடன் இணைந்து, கொரோனா முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள வேண்டும்,'' என, தி.மு.க., பொருளாளர், துரைமுருகன் கூறியுள்ளார்.

சென்னையில், அவர் அளித்த பேட்டி:'சட்டசபையை தொடர்ந்து நடத்தினால் தான், மக்களுக்கு கொரோனா குறித்த அச்சம் போகும்' என, முதல்வர், இ.பி.எஸ்., சொல்கிறார். சட்டசபையில், கொரோனா குறித்து விவாதிக்கப்படவில்லை. சில நிமிடங்கள் மட்டுமே, அது குறித்து பேசப்படுகிறது. துறை ரீதியான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடக்கிறது. வேறு கதைகளையே, அங்கு பேசுகிறோம்.கொரோனா தொடர்பான அறிக்கைகளை, 'டிவி' மற்றும் பத்திரிகைகள் வாயிலாக மக்களுக்கு எடுத்துச் செல்லலாம்.அதற்காக சட்டசபையை நடத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை. கொரோனா குறித்த அச்சம், நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு உள்ளது.அதனால் தான், பிளேக், அம்மை போன்ற நோய்களுக்கும், போருக்கும் பயப்படாத மக்கள், அரசின் உத்தரவை ஏற்று வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.ஊரடங்கு உத்தரவை காலை, 5:00 மணி வரை நீட்டிப்பதால், எந்த பயனும் இல்லை; இரவு, 9:00 மணிக்கு பின், அனைவரும் துாங்க சென்று விடுவர். எனவே, சட்டசபையை ஒத்திவைத்து, மாவட்டத்திற்கு ஒரு அமைச்சரை அனுப்பி வைக்க வேண்டும்.

அமைச்சர்கள், கலெக்டர்களுடன் இணைந்து, பொதுமக்களுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.மக்களும், அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சட்டசபையை, வரும், 31ம் தேதி வரை இரண்டு வேலை நடத்துவதால், எந்த பயனும் ஏற்படப்போவது இல்லை.இவ்வாறு, துரைமுருகன் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
23-மார்-202016:16:45 IST Report Abuse
karutthu முதலில் இவர் காட்பாடி ,வேலூர் க்கு சென்று இந்த வேலையை செய்யட்டும் இவரை பார்த்து அடுத்தவர்கள் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள் .மறுஅறிவிப்பு வரும்வரை அறிவாலயத்தையும் மூடிவிடுங்கள்
Rate this:
Share this comment
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
23-மார்-202012:04:54 IST Report Abuse
Matt P வேறு கதைகளையே, அங்கு பேசுகிறோம்......வேறு கதைகளை ஏன்யா அங்க போய் பேசுகிறீர்கள்? ..வீட்டில பேசலாமே .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X