பொது செய்தி

தமிழ்நாடு

31 வரை, 'டாஸ்மாக்' கடைகளுக்கு விடுப்பு? சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

Added : மார் 22, 2020
Share
Advertisement

சென்னை:'கொரோனா வைரஸ் ஒழிப்பை தீவிரப்படுத்தும் வகையில், வரும், 31ம் தேதி வரை, 'டாஸ்மாக்' மதுக்கடைகளை மூட வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தமிழக அரசின், டாஸ்மாக் நிறுவனம், 5,300 கடைகள் வாயிலாக, மது வகைகளை விற்பனை செய்கிறது. இந்த கடைகள், குறைந்த சதுர அடியில், குறுகலான இடங்களில் உள்ளன. இதனால், 'குடிமகன்'கள், மது வகைகளை வாங்க சிரமப்படுகின்றனர்.மேலும், ஒரே சமயத்தில், பலரும் மது வகைகளை வாங்க முயற்சிப்பதால், கூட்ட நெரிசல், தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. சிலர், மது கடைகளுக்கு அருகில் நின்று, மது அருந்தி விட்டு, காலி பாட்டில்களை அங்கேயே போட்டுச் செல்கின்றனர். இதனால், மதுக்கடைகள் மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில், சுகாதாரமற்ற சூழல் நிலவுகிறது.கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இம்மாதம், 17ம் தேதி முதல், 31ம் தேதி வரை, மதுக் கடைகளை ஒட்டிய பார்களை மட்டும் மூட, தமிழக அரசு உத்தரவிட்டது. பிரதமரின், மக்கள் ஊரடங்கு அறிவிப்பை தொடர்ந்து, மக்கள் நேற்று வீடுகளில் முடங்கினர். நேற்று ஒரு நாள் மட்டும், மதுக்கடைகள் மூடப்பட்டன. இந்நிலையில், கொரோனா ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்தும் வகையில், வரும், 31ம் தேதி வரை, அனைத்து ரயில் சேவைகளையும், ரயில்வே அமைச்சகம் ரத்து செய்துள்ளது. எனவே, சுகாதாரமற்ற சூழலில் உள்ள மதுக்கடைகளால், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, அந்த கடைகளையும், 31ம் தேதி வரை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஒரு பக்கம் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க எடுத்து வரும் நடவடிக்கைகளால், அரசுக்கு கிடைக்கும் நல்ல பெயர், மது கடைகளை மூடாவிட்டால், அவப்பெயராக மாற வாய்ப்பு உள்ளது.

இது குறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மது கடைகளை மூடுவது தொடர்பாக, முடிவு எடுக்கும் அதிகாரம், தமிழக அரசிடம் மட்டுமே உள்ளது; அரசு உத்தரவிட்டால், மது கடைகள் மூடப்படும்' என்றார்.'வருவாய் பாதிக்கும் என்று கருதாமல், கொரோனா ஒழிப்பு நடவடிக்கையாக, வரும், 31ம் தேதி வரை, மதுக்கடைகளை மூட வேண்டும்; தமிழக முதல்வர் இதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X