பொது செய்தி

தமிழ்நாடு

விலங்குகளிடம் இருந்து கொரோனா வைரஸ் பரவுமா?

Added : மார் 22, 2020
Share
Advertisement

சென்னை:''விலங்குகளிடம் இருந்து, கொரோனா வைரஸ் பரவாது; அவ்வாறு வரும் தகவல்கள் வெறும் வதந்தி,'' என, தமிழக அரசின், பொது சுகாதார துறை இயக்குனர், குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.

பிரதமரின் கோரிக்கையை ஏற்று, மக்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நேற்று, பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர். நோய் தடுப்பின் அவசியத்தை உணர்ந்ததால், மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தனர். அதேநேரம், நாய், பூனை உள்ளிட்ட செல்ல விலங்குகள், எந்த கவலையும் இன்றி சுற்றித்திரிந்தன. இந்த விலங்குகளால், நோய் தொற்று பரவாதா என்ற கேள்வி எழுகிறது.இது குறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குனர், குழந்தைசாமி கூறியதாவது:கொரோனா வைரஸ் தாக்கம் மனிதர்களிடமிருந்து, மனிதர்களுக்கு மட்டுமே பரவும். விலங்குகளிடம் இருந்து நிச்சயம் பரவாது. அவ்வாறு பரவும் என்று யாராவது கூறினால், அது வெறும் வதந்தி; யாரும் அதை நம்ப வேண்டாம். மேலும், கோழிக் கறி, முட்டை சாப்பிட்டால், கொரோனா வைரஸ் பரவும் என கூறுவதும் தவறு. இவ்வாறு, அவர் கூறினார்.

சென்னை கால்நடை மருத்துவ பல்கலை துணை வேந்தர், பாலச்சந்திரன் கூறுகையில், ''விலங்குகளிடம் இருந்து கொரோனா வைரஸ் பரவாது; பரவும் எனக்கூறுவது வதந்தி தான்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X