பொது செய்தி

தமிழ்நாடு

மேலும் 4 பேருக்கு கொரோனா

Added : மார் 22, 2020
Share
Advertisement

சென்னை:தமிழகத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஒன்பதாக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும், நான்கு பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இதுவரை, தமிழகத்திற்கு, 2.05 லட்சம் பேர் வந்துள்ளனர். அவர்களில், 9,424 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்; 54 பேர் மருத்துவமனைகளில் உள்ளனர். 443 பேரின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில், 352 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என, தெரிய வந்துள்ளது.இதுவரை, ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும், நான்கு பேருக்கு உறுதியானது. தமிழகத்தில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, ஒன்பதாக உயர்ந்துள்ளது. 84 பேர் ரத்த மாதிரிகளின் முடிவுகள் வர வேண்டியுள்ளது என, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்திய மருத்துவ சங்கத்தினர், சுகாதாரத் துறை அமைச்சர், செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நேற்று ஆலோசித்தனர்.
அதன்பின், சங்க நிர்வாகி கள் கூறியதாவது:தனியார் மருத்துவமனைகள் படுக்கை வசதியில், 50 சதவீதத்தை, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்காக, தயார் நிலையில் வைக்க வேண்டும். எங்கள் சங்கத்துடன், அனைத்து சிறப்பு மருத்துவ சங்கங்களும், தன்னார்வலர்களும் இணைந்து செயல்பட முன்வர வேண்டும். எங்களுடன் பணியாற்ற விரும்புவோர், சங்கத் தலைவர், டாக்டர் ராஜாவை, 98427 17277; செயலர் ரவிகுமாரை, 98422 22404 என்ற, எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும், imatamilnadu@gmail.com என்ற, 'இ-மெயில்' முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம். மேலும் விபரங்களை, www.imatn.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X