பொது செய்தி

தமிழ்நாடு

நடிகர் விசு காலமானார்

Added : மார் 22, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 நடிகர் விசு காலமானார்

சென்னை:நடிகரும், இயக்குனரு மான, விசு, 74, உடல் நல குறைவால் நேற்று காலமானார்.
நடிகர், இயக்குனர், கதாசிரியர், தயாரிப்பாளர், தொகுப்பாளர் என, பன்முகத்தன்மை உடையவர் விசு, 74. சென்னை, துரைப்பாக்கத்தில், குடும்பத்துடன் வசித்து வந்தார். சில மாதங்களுக்கு முன், அமெரிக்கா சென்று, சிகிச்சை பெற்று திரும்பினார்.இந்நிலையில், உடல்நல கோளாறால், நேற்று மாலை, தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட விசு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு, உமா என்ற மனைவியும், மூன்று மகள்களும் உள்ளனர். மகள்கள் மூவருக்கும் திருமணம்ஆகி விட்டது.சினிமாவில், பாலசந்தரிடம் துணை இயக்குனராக பணியாற்றிய இவர், தில்லுமுல்லு படத்தில், வசன கர்த்தாவாக அறிமுகமானார்.குடும்பம் ஒரு கதம்பம் படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். கண்மணி பூங்கா என்ற படம் வாயிலாக, இயக்குனராக அறிமுகமானார். மணல் கயிறு, சிதம்பர ரகசியம், சம்சாரம் அது மின்சாரம், திருமதி ஒரு வெகுமதி, பெண்மணி அவள் கண்மணி உட்பட, பல படங்களை இயக்கினார்.சின்னத்திரையிலும், நிகழ்ச்சிகளை தயாரித்து, தொகுத்து வழங்கினார். முன்னதாக, மேடை நாடகங்களிலும் தன் திறமையை வெளிப்படுத்தியவர் விசு. இவரது, சம்சாரம் அது மின்சாரம் படம், பெரும்பாலான இந்திய மொழிகளில் எடுக்கப்பட்டது. இந்த படத்திற்கு, 1986ல், சிறந்த தமிழ் படத்திற்கான, பிலிம்பேர் விருது கிடைத்தது. சமீபத்தில், நெற்றிக்கண் பட ரீமேக் விவகாரம் தொடர்பாக, நடிகர் தனுஷ், கவிதாலயா மீது வழக்கு தொடுக்கப் போவதாக எச்சரித்து இருந்தார். விசுவின் மறைவுக்கு, திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். விசுவின் இறுதிச்சடங்கு இன்று நடைபெற உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ESSEN - VA,யூ.எஸ்.ஏ
23-மார்-202018:27:04 IST Report Abuse
ESSEN எல்லோரும் ரசித்த நல்ல மனிதர் .அவரது ஆத்மா சாந்தி அடைய கடவுள் அருள் புரியட்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X