பொது செய்தி

இந்தியா

கொரோனா செய்திகள்: 'ஏசி' பயன்படுத்த தடை

Added : மார் 22, 2020
Share
Advertisement

மும்பை: மஹாராஷ்டிர அரசு, கொரோனா பரவலை தடுக்க, அனைத்து அரசு அலுவலகங் களிலும், 'ஏசி' பயன்படுத்த தடை விதித்துள்ளது. 'ஏசி' சாதனம் இயங்கும் போது உண்டாகும் ஈரப்பதத்தில், கொரோனா வைரஸ் நீண்ட காலம் உயிர் வாழும் என்பதால், அதை இயக்குவதற்கு பதிலாக, வெளிக் காற்று வர வசதியாக, ஜன்னல்களை திறந்து வைக்குமாறு, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிறப்பு அறிவிப்பு
புதுடில்லி: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, இந்தியாவில், சர்வதேச விமானங்களுக்கான தடை, அமலுக்கு வந்துள்ளது. இதனால், பல்வேறு நாடுகளுக்கு சென்றுள்ள இந்தியர்களுக்கு, அங்குள்ள இந்திய துாதரகங்கள் அறிவுரைகளை வழங்கியுள்ளன. தடை அமலுக்கு முன், இந்தியாவுக்கு செல்ல விரும்பும் இந்தியர்கள், உடனடியாக துாதரகத்தை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுஉள்ளது. பிரான்ஸ், கனடா, கிரீஸ், பின்லாந்து, இஸ்ரேல், ஜப்பான், வியட்நாம், பல்காரியா, ரஷ்யா, கியூபா, பிரேசில், ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள இந்திய துாதரகங்கள் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
கொரோனா தடுப்புக்கு நிதியுதவிநாடுகளுக்கு பிரதமர் மோடி நன்றி
புதுடில்லி: கொரோனா வைரஸ் நோய் பரவலை தடுப்பது பற்றி, 'சார்க்' எனப்படும் தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பை சேர்ந்த நாடுகளின் தலைவர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக, கடந்த, 15ம் தேதி, பிரதமர், மோடி பேசினார்.அப்போது, கொரோனாவை தடுக்க, 'கொரோனா நெருக்கடி நிதி' ஒன்றை உருவாக்கியுள்ளதாக தெரிவித்த பிரதமர், அதற்கு, இந்தியா சார்பில், 70 கோடி ரூபாய் வழங்குவதாக தெரிவித்தார்.இதையடுத்து, இந்த நிதிக்கு, 1.4 கோடி ரூபாய் வழங்குவதாக, மாலத்தீவு அறிவித்தது. பூடான் பிரதமர், லேடே ஷெரிங், 70 லட்ச ரூபாய் வழங்குவதாக அறிவித்தார். நேபாள பிரதமர், ஷர்மா ஒலி, 10 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்தார்.இந்நிலையில், கொரோனோ நெருக்கடி நிதிக்கு, நிதியுதவி அளித்துள்ள நாடுகளுக்கு, பிரதமர், மோடி நன்றி தெரிவித்துள்ளார். ''மாலத்தீவு, பூடான், நேபாளம் ஆகிய நாடுகள் நிதியுதவி அளித்துள்ளது, மகிழ்ச்சியளிக்கிறது. இது, கொரோனா தொற்று நோயை ஒழிக்க, நம் ஒருங்கிணைந்த போராட்டத்தை வெளிபடுத்துகிறது,'' என்றார்.
பாலியல் தொழிலுக்குகட்டாய விடுமுறை
தானே: மஹாராஷ்டிராவில், தானே மாவட்டம், பிவாண்டி நகரில் உள்ள, ஹனுமன் தெக்டி பகுதியில், 300 பேர் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் குழந்தைகளை, அருகில் உள்ள, ஷ்ரமாஜிவி சங்காதனா என்ற அமைப்பு பராமரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனா அச்சத்தால், பாலியல் தொழிலுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை விடப்படுவதாக, தொழிலாளர் கள் அறிவித்து உள்ளனர். இதனால் ஏற்படும் வருவாய் இழப்பிற்கு உதவுவதாக, ஷ்ரமாஜிவி சங்காதனா அமைப்பு உறுதி அளித்துள்ளது. நாட்டிலேயே, மஹாராஷ்டிராவில் தான் அதிகளவில், 63 பேர் கொரோனா தாக்கத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X