அமெரிக்காவில் இருந்து வந்த எம்.எல்.ஏ., நிகழ்ச்சிகளில் பங்கேற்றதால், 'நோட்டீஸ்'

Added : மார் 22, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

ஐதராபாத்:அமெரிக்காவில் இருந்து, ௧௭ம் தேதி இந்தியா திரும்பிய, ஆந்திர ஆளும் கட்சியின் எம்.எல்.ஏ., தனிமையில் இருப்பதாக அதிகாரிகளிடம் உறுதி அளித்தார். ஆனால், அதனை பின்பற்றாமல் நிகழ்ச்சிகளில் பங்கேற்றதால், அவருக்கு, கலெக்டர், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளார்.
தெலுங்கானாவில், முதல்வர், சந்திரசேகர ராவ் தலைமையில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. இங்கு, ஆளும் கட்சியின், சிர்பூர் -ககாஸ்நகர் தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருப்பவர், கொனேரு கொனப்பா.கையெழுத்துஇவர், தன் மனைவியுடன் அமெரிக்காவில் இருந்து, ௧௭ம் தேதி இந்தியா திரும்பினார். விமான நிலையத்தில், 'மனைவியுடன் வீட்டில் தனிமையில் இருப்பேன்' என, உறுதிமொழி படிவத்தில் கையெழுத்திட்டார்.ஆனால், அதனை பின்பற்றாமல், அடுத்த நாள், தெலுங்கானா எக்ஸ்பிரஸ் ரயிலில், செகந்திராபாதில் இருந்து ககாஸ்நகர் சென்றார். அங்கு, நகராட்சி கவுன்சில் உறுப்பினர்களுடன் பேசியுள்ளார். அங்குள்ள கோவிலில், 3, 000 பேர் பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவரது ஆதரவாளர்களுடன் கைகுலுக்கி உள்ளார்.தனிமைவெளிநாடுகளில் இருந்து வருவோர், தேவையில்லாத பயணங்களை தவிர்த்து, கண்டிப்பாக, 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என, அரசு கூறுகிறது. ஆனால், ஆளும் கட்சியின் எம்.எல்.ஏ., அந்த விதிகளை பின்பற்றவில்லை. இதனால், தன்னை தனிமைப்படுத்தி கொள்ளாதது குறித்து விளக்கம் அளிக்கும்படி, எம்.எல்.ஏ.,வுக்கு, ஆசிபாபாத் மாவட்ட கலெக்டர் நோட்டீஸ் அனுப்பிஉள்ளார்.பிரான்சில் இருந்து வந்தவருக்கு திருமணம்கொரோனா வைரஸ் அச்சத்திற்கு நடுவே, தெலுங்கானாவின் வாராங்கல் நகரில், ௧௮ம் தேதி, பெரிய அளவில் திருமண விழா நடைபெற்றுஉள்ளது. மணமகன், பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்த ஏழு நாட்களில், திருமணத்தில் பங்கேற்றுஉள்ளார். அதன் பிறகு, மணமகனை தனிமைப்படுத்தியதால், நேற்று முன்தினம் நடக்க இருந்த, வரவேற்பு நிகழ்ச்சி ரத்தானது. திருமண விழா குறித்து, அதில் பங்கேற்ற ஒருவர் கூறும்போது, 'விழாவில், ௧,௦௦௦க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 'மணமக்கள் உள்ளிட்ட, விழாவில் பங்கேற்ற ஒருவரும் முக கவசம் அணிந்திருக்கவில்லை. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
23-மார்-202006:04:32 IST Report Abuse
D.Ambujavalli ஒரு மக்கள் பிரதிநிதியே இவ்வளவு பொறுப்பற்ற நிலையில் இருந்தால் பொதுமக்களுக்கு அறிவுரை கூற என்ன தகுதியுள்ளது? வெளிநாட்டு மாப்பிள்ளை, திருமணம் அவசரம் என்றாலும் கூட்டம் கூட்டாது செய்யக்கூடாதா? இவர்களே நோய்ப்பரப்பிகள், இவர்களுக்கு கடும் தண்டனை அளிக்கப்பட வேண்டும்
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
23-மார்-202004:01:15 IST Report Abuse
J.V. Iyer எவ்வளவு பொறுப்பற்ற செயல்? இவர் பதவியை விட்டு தூக்கினால் என்ன? இவரை மக்கள் நம்புவார்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X