கொரோனா பாதித்தவர் விழாக்களில் பங்கேற்பு

Added : மார் 22, 2020
Share
Advertisement

காசர்கோடு:கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஒருவர், தனிமையில் இருந்து சிகிச்சை பெறாமல், திருமணம் உள்ளிட்ட விழாக்களில் பங்கேற்று வருகிறார். அவர் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கேரளாவில், முதல்வர், பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின் காசர்கோடு மாவட்டத்தில், கொரோனாவால், எட்டு பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இது குறித்து, முதல்வர், பினராயி விஜயன் கூறும்போது, ''காசர்கோடு மாவட்டத்தில், அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், ஒரு வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. ''கடைகள் உள்ளிட்ட வியாபார நிறுவனங்கள், காலை, 11:00 மணி முதல், மாலை, ௫:00 மணி வரை மட்டும் செயல்பட வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபருடன் பழகிய, இரண்டு, எம்.எல்.ஏ.,க்கள், தங்களை சுயமாக தனிமைப்படுத்தி கொண்டுஉள்ளனர்,'' என்றார்.காசர்கோடு மாவட்டத்தில், அரசு உத்தரவின்படி, நேற்று முழு அடைப்பு நடை பெற்றது. ஆனால், சிலர் விதிகளை மீறி கடைகளை திறந்திருந்தனர். இதனால், 10 பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது குறித்து, மாவட்ட கலெக்டர், டி.சஜித் பாபு கூறியதாவது:மாவட்டத்தில், முழு அடைப்புக்கு உத்தரவிட்டிருந்த நிலையில், கடைகளை திறந்த, 10 பேர் மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர், சுகாதார துறையினரின் அறிவுரைகளை பொருட்படுத்தாமல், திருமணம் உள்ளிட்ட விழாக்களில் பங்கேற்று வருகிறார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.அரசு ஊழியர்களுக்கு பகுதி நேர பணிகேரளாவில், கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், அங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன. இதன்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ''அரசு ஊழியர்கள் இரண்டு வாரங்களுக்கு, பகுதிநேரம் பணியாற்றினால் போதும்,'' என, முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X