பொது செய்தி

தமிழ்நாடு

மின் தடை புகாருக்கு இலவச எண் அறிவிப்பு

Added : மார் 22, 2020
Share
Advertisement

திருப்போரூர் : மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், மின் தடை குறித்த புகாரை தெரிவிக்கவும், அதற்கு உடனடி தீர்வு காணவும், கணினி மயமாக்கப்பட்ட மின் தடை நீக்கும் மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதன் மூலம், மின் நுகர்வோர், தங்கள் பகுதி மின் தடை புகாரை, இலவச எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.அதன்படி, திருப்போரூர் மின் வாரிய அலுவலகத்தில், அதற்கான அறிவிப்பு, 'நோட்டீஸ்' ஒட்டப்பட்டுள்ளது.அதில், 'மின் தடை குறித்த புகார்களுக்கு, இலவச தொலைபேசி எண்ணான, 1800 425 8977 என்ற எண்ணில், 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்' என, கூறப்பட்டு உள்ளது.

இது குறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:செங்கல்பட்டு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில், மின் தடை குறித்த புகாருக்கு தீர்வு காண, கணினி மயமாக்கப்பட்ட மின் தடை நீக்கும் மையம் அமைக்கப்பட்டு உள்ளது.இதில் பெறப்படும் புகார், உடனடியாக திருப்போரூர் உட்பட அந்தந்த மின்வாரிய அலுவலகத்தின், சம்பந்தப்பட்ட ஒயர்மேன்களுக்கு, குறுந்தகவல் மூலம் தகவல் அளிக்கப்படும். இதன் மூலம், மின் தடையை எளிதாக நீக்கப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X