சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் பணிக்கு அழைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் பணிக்கு அழைப்பு

Added : மார் 22, 2020
Share
காஞ்சிபுரம் : 'குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தில், சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்' என, காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா தெரிவித்து உள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட கலெக்டரை தலைவராக வைத்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு

காஞ்சிபுரம் : 'குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தில், சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்' என, காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா தெரிவித்து உள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட கலெக்டரை தலைவராக வைத்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு இயங்கி வருகிறது.இங்கு, காலியாக உள்ள சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் பணியிடம், தொகுப்பு ஊதிய அடிப்படையில் நிரப்ப, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இப்பணிக்கு, குழந்தைகள் சம்பந்தப்பட்ட சட்டம் சார்ந்த சேவையில், ஓராண்டு பணி அனுபவ சான்று அவசியம். 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள், www.kancheepuram.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, காஞ்சிபுரம் மாமல்லன் நகரில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தில், ஏப்ரல், 20ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X