பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளி மகளுடன் தவிக்கும் தாய்

Added : மார் 22, 2020
Share
Advertisement
 மாற்றுத்திறனாளி மகளுடன் தவிக்கும் தாய்

மானாமதுரை : மானாமதுரையில் மனவளர்ச்சி குன்றிய நடக்க முடியாத மாற்றுத்திறனாளி பெண்ணை வைத்து பரிதவித்து வருவதாக அப்பெண்ணின் தாயார் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார்.

மானாமதுரை கன்னார் தெருவைச் சேர்ந்தவர் மருதப்பன் 55, இவர் சில்வர் பட்டறை தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார்.கடந்த 2015ல் திடீரென உயிரிழந்தார். இவரது மனைவி ராஜேஸ்வரி மாற்றுத்திறனாளி மகளான கோகிலா 21 வை கூலி வேலை செய்து காப்பாற்றி வருகிறார்.கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வயிற்றில் இருந்த 10 கிலோ கட்டியால் அவதிப்பட்டு அதனை அகற்றிய நிலையில், தனது மகளை துாக்கவோ மற்றும் மகளை இயற்கை உபாதைகளை கழிக்க துாக்கி செல்லவோ முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்.

அவரை பராமரிக்க முடியாமல் திணறி வருகிறார். தனது மகளை அரசு காப்பகங்களில் சேர்க்க வேண்டியும்,வேலையில்லாத மகனை வைத்து கொண்டு குடும்பம் நடத்த முடியாமல் கஷ்டப்பட்டு வருவதை பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விரக்தியில் தன்னையும்,தனது மகளையும் கருணை கொலை ெசய்ய அனுமதி கேட்டு மனு கொடுத்தும் இது வரை எந்த உதவியும் கிடைக்கவில்லை என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X