தமிழ்நாடு

மக்களின் முழு ஆதரவுடன் சிவகங்கை மாவட்டத்தில் 'மக்கள் ஊரடங்கு'

Added : மார் 22, 2020
Share
Advertisement
மக்களின் முழு ஆதரவுடன் சிவகங்கை மாவட்டத்தில் 'மக்கள் ஊரடங்கு'

சிவகங்கை : பிரதமர் மோடியின் அன்பு கட்டளை மற்றும் தமிழக அரசின் உத்தரவுக்கு மரியாதை செய்யும் விதமாக 'கொரோனா வைரஸ்' பாதிப்பின்றி இருக்க சிவகங்கை மாவட்டத்தில் 'மக்கள் ஊரடங்கு' நேற்று மக்களின் முழு ஆதரவுடன் நடைபெற்றது.

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை காக்கும் நோக்கில்,பிரதமர் மோடி மார்ச் 16 முதல் 31 வரை பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை,பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டார்.மத்திய,மாநில அரசின் ஆணைக்கிணங்க மக்கள் அதிகம் கூடும் இடங்களான கோயில், கிறிஸ்தவ ஆலயங்களில் மார்ச் 31 வரை சிறப்பு பூஜை, திருப்பலி, வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம் இன்றி இருந்தாலே 'கொரோனா வைரஸ்' பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம் என்பதால், மார்ச் 22 அன்று காலை 7:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை 'மக்கள் ஊரடங்கு' நடத்துமாறு பிரதமர் மோடி அன்பு வேண்டுகோள் விடுத்தார்.

இதை முழுமனதாக ஏற்ற மக்கள் நேற்று 'மக்களின் ஊரடங்கிற்கு' முழு ஆதரவளித்தனர். சிவகங்கை மட்டுமின்றி மாவட்ட அளவில் பஸ், ரயில்கள் ஓடாமல் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் வெறிச்சோடி காணப்பட்டது. ஆட்டோ, லாரிகள் என அனைத்து வாகனங்களும் இயக்கப்படவில்லை. மாவட்டத்தில் கடைகள் முற்றிலுமாக அடைக்கப்பட்டிருந்தன. நேற்று சிவகங்கை மாவட்டத்தில் 'மக்களின் ஊரடங்கு' அமைதியான முறையில் மக்களின் முழு ஆதரவுடன் நடைபெற்றது. மக்கள் தாங்களாகவே முன்வந்து வீட்டை விட்டு வெளியேறாமல் இருந்தனர்.

மானாமதுரை: மானாமதுரையில் புது பஸ் ஸ்டாண்ட்,மற்றும் பழைய பஸ் ஸ்டாண்ட் ஆகிய பகுதிகளில் பஸ்கள் ஓடாததாலும்,கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததாலும் வெறிச்சோடி காணப்பட்டது. இதே போன்று ரயில்வே ஜங்ஷனும் வெறிச்சோடி கிடந்தது.நகரின் முக்கிய பகுதிகளான அண்ணாத்துரை சிலை,காந்தி சிலை,தேவர்சிலை, சிப்காட் பகுதிகளிலும் மக்கள் நமாட்டமின்றி ரோடுகள் காலியாக கிடந்தன.மானாமதுரை பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

இடைக்காட்டூரில் உள்ள புகழ்பெற்ற திருஇருதய ஆண்டவர் தேவாலயத்திற்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை என்றாலும் மக்கள் ஊரடங்கை கடைப்பிடித்து யாரும் வராததால் அந்த பகுதி முழுவதும் மக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டது.தாயமங்கலத்தில் உள்ள புகழ்பெற்ற முத்துமாரியம்மன் கோயிலில் வருகிற 28 ந் தேதி பங்குனி பொங்கல் விழா கொடியேற்றத்தோடு துவங்க உள்ள நிலையில் பங்குனி பிறந்தவுடன் வெள்ளி,ஞாயிறு கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்,ஆனால் நேற்று மக்கள் ஊரடங்கு நடைபெற்றதாலும்,கோயிலிலும் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதித்திருப்பதால் கோயில் வளாகம் முழுவதும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X