பொது செய்தி

தமிழ்நாடு

வேப்பிலை, மஞ்சள் தூள் போதும்; படிகார நீரிலும் கை கழுவலாம்!

Updated : மார் 23, 2020 | Added : மார் 22, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
வேப்பிலை, மஞ்சள் தூள், போதும், படிகார நீரிலும், கை கழுவலாம்!

சென்னை:''படிகார நீரை, கிருமி நாசினியாக பயன்படுத்தி கை கழுவினால் போதும்; கொரோனா பாதிப்பில் இருந்து தப்பலாம். வீடுகளில் வேப்பிலை, மஞ்சள் தண்ணீர் கலந்து தெளிக்கலாம்,'' என, மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தின் முன்னாள் இயக்குனர்
ஜெகஜோதி பாண்டியன் கூறினார்.

இது குறித்து, அவர் கூறியதாவது:கொரோனா உள்ளிட்ட நோய் தொற்று பரவுவதை தடுக்க, வசதி படைத்தவர்கள், 'சானிடைசர்' போன்ற கிருமி நாசினிகளை பயன்படுத்துகின்றனர்.
முககவசம் அணிகின்றனர்.வீடுகளை சுத்தம் செய்ய, 'டெட்டால், லைசால், ஹார்பிக்ஸ்' போன்றவற்றை பயன்படுத்துகின்றனர்.வசதி குறைந்தவர்களும், கிராமப்புறங்களில்
வசிப்பவர்களும், இவற்றை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. காரணம், அவர்களுக்கு பொருளாதாரம் இடம் கொடுக்காது.


இயற்கை வழி என்ன?கொரோனா உள்ளிட்ட வைரஸ் பாதிப்புகளில் இருந்து தப்ப, இயற்கையிலேயே பல கிருமி நாசினிகள் உள்ளன. அவற்றை பயன்படுத்தினால் போதும்.வேப்பங்கொழுந்து, மஞ்சள் துாள் கலந்து துவையல் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

இதை, வீட்டிற்கு வெளியேசெல்லும்போது, கையில் தேய்த்து கழுவி கொள்ளலாம்.வெறும் மஞ்சள் துாளில் கைகழுவினாலும் கிருமிகள் அழிந்து விடும். கடலைமாவிற்கு எதையும்
சுத்தப்படுத்தும் தன்மை உள்ளது. கடலை மாவு தேய்த்து, கைகளை கழுவலாம்.படிகாரம்
கிருமியை கொல்லக்கூடிய தன்மை உடையது. அதனால் தான், முன்பெல்லாம், முடி திருத்தும் கடைகளில், முகச்சவரம் செய்தபின், படிகாரத்தை தேய்த்து அனுப்புவர்.

இதனால், முகத்தில் ஏற்பட்ட சிறிய வெட்டு காயங்கள் வழியாக, கிருமிகள் பாதிப்பு தடுக்கப்படும்.படிகாரத்தை நீரில் கரைத்து கைகளை கழுவினால், கொரோனா பாதிப்பில் இருந்து தப்பலாம். வீடுகளிலும் அவற்றை தெளித்தால், கிருமிகள் அழிந்து விடும்.வேப்பிலை, மஞ்சள் தண்ணீரை கலந்தும், வீடுகளில் தெளிக்கலாம். வீட்டு வாசலில் மாட்டு சாணத்தை
தெளித்தாலும், கிருமிகள் வராது. வாசலில் வேப்பிலையை தோரணமாக தொங்க விடலாம்.

முன்பெல்லாம், அம்மை பாதிப்பில் இருந்து தப்ப, இதைத்தான் நம் முன்னோர்கள் பயன்படுத்தினர்.வேப்பமர பட்டையை நீரில் கொதிக்க வைத்து, அதை வடிகட்டி பாட்டிலில்வைத்து, கிருமி நாசினியாகபயன்படுத்தலாம். இவற்றை, டாய்லெட்சுத்தம் செய்யவும் பயன்படுத்தலாம்.

எனவே, இயற்கை கொடுத்த இந்த இயற்கை கிருமி நாசினிகளை, பொதுமக்கள் பயன்படுத்தி, கொரோனா பாதிப்பில் இருந்து எளிதாக தப்பலாம்.இவ்வாறு, ஜெகஜோதி பாண்டியன் கூறினார்.


கபசுர குடிநீர்'சளி, காய்ச்சல், இருமல் வராமல் தடுத்தால், கொரோனா பாதிப்பில் இருந்து தப்பலாம்; அதற்கு, கபசுர குடிநீர் கை கொடுக்கிறது' என, சித்த மருத்துவர்கள் கருதுகின்றனர். இது தொடர்பான செய்தி, நம் நாளிதழில், 16ம் தேதி வெளியானது.இதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள அரசு தலைமை மருத்துவமனைகளில் இலவசமாக, கபசுர குடிநீர்வழங்கும் பணி துவங்கியுள்ளது.

கபசுர குடிநீர், 15 வகையான மூலிகைகளை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இது தொடர்பான, துண்டு பிரசுரங்களும்,பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.


'கொரோனா தொற்றாமல் இருக்க இம்பூறல்'

-மூலிகை மணி சித்த மருத்துவர், க.வெங்கடேசன் கூறியதாவது:

*பல காரணங்களால், இருமல் உண்டாகும். நுரையீரலில் உருவாகும் சளி, நுண்ணிய காற்று அறைகளை அடைத்து, நுரையீரலை செயல்படாமல் தடுக்கும். இதற்கு துாதுவளை, ஆடாதொடை, இஞ்சி, சித்தரத்தை, முசுமுசுக்கை, உத்தாமணி என, பல மூலிகைகளை
சித்தர்கள் மருந்தாக்கி சாப்பிடச் சொன்னாலும், தீவிரமானஇருமல் வரும் போது,
நுரையீரலிலிருந்துசளி ரத்தத்துடன் வெளியேறும்.

* அந்த காலத்திலேயே, இது போன்ற வைரஸ்கள் நுரையீரலை தாக்கிய நிலையில், ரத்தம் கக்கி மரணநிலையை உண்டாக்கிய போது, இம்பூறல், அதிமதுரம், இஞ்சி, ஆடாதொடை, மிளகு, கிராம்பு சேர்த்த கஷாயம் மிகச்சிறப்பாக வேலை செய்து காப்பாற்றியுள்ளது. காலை, மாலை இருவேளையும், பெரியவர்கள், 100 மில்லியும், சிறியவர்கள்,50 மில்லியும் பருக, கொரோனா வைரஸ் உடம்பில் நுழையாது

*கொரோனாவுக்கு எதிராக இம்பூறல் சிறப்பாக செயல்படும். இது, வைரஸ் தொற்றை தடுப்பதுடன், நுரையீரல் பாதிப்பையும் சரி செய்கிறது. இம்பூறல் மூலிகையை ஒரு பிடி வேருடன் பிடுங்கி, சுத்தமான நீரில் அலசி, நிழலில் ஒரு மணி நேரம் காயவைக்க வேண்டும். பின், அதை நன்கு அரைத்து, ஒரு டம்ளர் நீரில் கொதிக்க விட்ட பின், அதில், அதிமதுரம், 10 கிராம்; இஞ்சி, இரண்டு துண்டு; ஆடாதொடை, ஐந்து இலை; மிளகு, 10 கிராம்; கிராம்பு 5 கிராம் ஆகியவற்றை இடித்து போட்டு, 10 நிமிடம் கொதித்த பின் இறக்க வேண்டும். அதை வடிகட்டி, அதில், 2 ஸ்பூன் அளவு, தேன் கலந்து பருக வேண்டும்

* இம்பூறல் கிடைக்கவில்லை என்றால், சென்னை அடையாறில் உள்ள, 'இம்ப்காப்ஸ்' என்ற, மத்திய நிறுவனத்தில், இம்பூறல் மாத்திரை விற்கப்படுகிறது. அதை வாங்கியும், மேற்சொன்ன கஷாயத்துடன் சேர்த்து பருகலாம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
23-மார்-202010:11:52 IST Report Abuse
vbs manian வேம்ப எண்ணெய் நல்ல கிருமி நாசினி. ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் எடுத்து gasil ஏறிய வைத்து வீட்டில் ஒரு மூலையில் வைத்தால் உள்ளே இருக்கும் கிருமிகள் அழியும். சுட வாய்த்த எண்ணையை படுக்கும் முன் வாய் பற்களில் ஈறுகளில் தேய்த்து கொண்டால் பற்கள் தொற்று ஈறு வீக்கம் ரத்தம் வடிதல் குணம் ஆகும். வாரத்துக்கு ஒரு முறையாவது வேப்பம்பூ ரசம் வைத்து சாப்பிட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
23-மார்-202009:49:34 IST Report Abuse
Lion Drsekar இதைத்தான் நான் சில நாளுக்கு முன்னாள் நமது தினமலரில் பதிவு செய்திருந்தேன், என்னை தவிர வேறு யாருக்குமே அது பயனுள்ளதாக இல்லாதது வருத்தம் , வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X