சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பராமரிப்பில்லாத மகளிர் சுகாதார வளாகம்

Added : மார் 22, 2020
Share
Advertisement

திருப்பாச்சூர் : திருப்பாச்சூரில், பராமரிப்பில்லாத மகளிர் சுகாதார வளாகத்தால், பெண்களும், கோவிலுக்கு வரும் பக்தர்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.

திருவள்ளூர் அடுத்துள்ளது திருப்பாச்சூர். திருத்தணி முருகன் கோவிலின் உப கோவிலான தங்காதலி உடனுறை வாசீஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது.இங்குள்ள ஊராட்சி மன்ற அலுவலகம், சமுதாயக் கூடம் மற்றும் கோவில் அருகே, 12 ஆண்டுகளுக்கு முன் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் அமைக்கப்பட்டது.இந்த மகளிர் சுகாதார வளாகத்தை, இப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், 2011 - -12ம் ஆண்டு, சீரமைக்கப்பட்ட மகளிர் சுகாதார வளாகம், அதன் பின், எட்டு ஆண்டுகளாக எவ்வித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படாததால், மகளிர் சுகாதார வளாகத்தை யாரும் பயன்படுத்த முடிவதில்லை.இதனால், இப்பகுதி பெண்களும், கோவிலுக்கு வரும் பக்தர்களும், கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து, அருகிலுள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில், பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என, பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்து, மகளிர் சுகாதார வளாகத்தை சீரமைக்க வேண்டும் என, பெண்களும், பக்தர்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X