பொது செய்தி

தமிழ்நாடு

மகளிர் சுய உதவிக்குழு மூலம் முகக்கவசம் தயாரிக்க திட்டம்

Added : மார் 22, 2020
Share
Advertisement

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள்மூலம் முக கவசம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் கிருமி நாசினி தயாரிக்கும் பணி நடக்கிறது. இதில் 1,500 லிட்டர் கிருமிநாசினியை தயார் செய்தனர். இதனை அரசுமருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குவழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முக கவசம்தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.கொரோனாதடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவமனை டாக்டர்கள், நர்ஸ்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு முகக் கவசம் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க மகளிர் சுயஉதவி குழுக்களை பயன்படுத்தி முகக்கவசம் தயாரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

முகக்கவச மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அதனைதரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் சோதனைசெய்துள்ளனர். அதிகாரிகள் பரிந்துரைப்படி புதிய முககவசங்கள் தயாரிக்க மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் முகக்கவசம் தயாரிக்கதிட்டமிடப்பட்டுள்ளது.இவர்கள் தயாரிக்கும் அனைத்துமுக கவசங்களும் அரசு மருத்துவமனைகள், நகராட்சிதுப்புரவு பணியாளர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X