பொது செய்தி

தமிழ்நாடு

மக்கள் ஊரடங்கிலும் விவசாய பணி தீவிரம்

Added : மார் 22, 2020
Share
Advertisement

உத்திரமேரூர் : பிரதமரின் மக்கள் ஊரடங்கு அழைப்புக்கு, உத்திரமேரூர் நகரவாசிகள் முழு ஆதரவு அளித்தாலும், கிராமப்புறங்களில், விவசாயிகள், தங்கள் அன்றாட பணிகளில், நேற்று ஈடுபட்டனர்.

'கொரோனா' வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, நேற்று காலை, 7:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை, பொதுமக்கள், வீட்டில் இருந்து வெளியே வராமல், மக்கள் ஊரடங்கிற்கு ஆதரவு தர வேண்டும் என, பிரதமர், மோடி வேண்டு கோள் விடுத்தார்.இதற்கு, உத்திரமேரூர் நகரவாசிகள் முழு ஆதரவு தெரிவித்து, வீட்டில் இருந்தனர். அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. இருப்பினும், உத்திரமேரூரைச் சுற்றியுஉள்ள கிராமங்களில், வழக்கம் போல், விவசாயிகள், தங்கள் விவசாய பணிகளில் ஈடுபட்டனர்.

கார்த்திகை பட்டத்தில் விதைப்பு செய்து, தயாரான வேர்க்கடலையை அறுவடை செய்தல். நெல் பயிரிட ஏர் உழுதல், அறுவடை செய்த நெல்லை அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் உலர வைத்தல், மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி செல்லுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X