பொது செய்தி

தமிழ்நாடு

களையிழந்த திருமண விழாக்கள்

Added : மார் 22, 2020
Share
Advertisement

பரமக்குடி : 'கொரோனா ஒழிப்பு போராட்டத்தில் பிரதமரின் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் நடந்த மக்கள் ஊரடங்கில் பரமக்குடி மக்கள் முழுமையாக பங்கேற்றதால் ஆங்காங்கே நடந்த ஒன்றிரண்டு திருமண விழாக்காளும் களையிழந்து காணப்பட்டது.

பரமக்குடியில் நேற்று முன்தினம் முதல் வழிபாட்டுத் தலங்களில்பக்தர்கள் தரிசனம் நிறுத்தப்பட்டு, வழக்கமான பூஜைகள் மட்டும்நடக்கிறது. நேற்று காலை 7:00 மணிக்கு துவங்கிய மக்கள்சுய ஊரடங்கை முன்னிட்டி ஒரு சில பகுதிகளில் காய்கறி மற்றும்இறைச்சி கடைகள் 8:00 மணி வரை இயங்கியது.

தொடர்ந்து திருமணம் உள்ளிட்ட விசேஷங்களை வைத்திருந்தவர்கள் வழக்கத்திற்கும் மாறாக எந்த சத்தமும் இன்றி உறவினர்கள் மட்டுமே வந்திருந்து நிகழ்ச்சியை நடத்தினர். நகரில் மூலை, முடுக்களில் இருந்த அனைத்து சிறு டீக்கடைகள் துவங்கி தெருவோர கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X