சீனாவில் 3 நாளுக்கு பின் மீண்டும் கொரோனா

Added : மார் 22, 2020
Share
Advertisement

பீஜிங்:சீனாவில், கடந்த மூன்று நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படாமல் இருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் ஒருவருக்கு, புதிதாக வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரசின் பிறப்பிடமான சீனாவில், கடந்த மூன்று நாட்களாக, புதிய நபர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருந்தது. ஆனால், நேற்று முன்தினம், புதிதாக ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார். இது குறித்து, சீனாவின், தேசிய சுகாதார ஆணையத்தின் அறிக்கை:சீனாவில், நேற்று முன்தினம், புதிதாக, 46 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில், 45 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். குவாங்சோவை சேர்ந்த ஒருவருக்கு, புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால், ஹூபய் மாகாணத்தைச் சேர்ந்த, ஐந்து பேர் உள்ளிட்ட ஆறு பேர் இறந்த நிலையில், கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை, 3,291 ஆக உயர்ந்துள்ளது.கொரோனாவின் மையமான வூஹான் நகரில், நான்காவது நாளாக, புதிதாக யாரும் வைரசால் பாதிக்கப்படவில்லை. நாடு முழுதும், நேற்று முன்தினம் வரை, கொரோனாவால், ௮௧ ஆயிரத்து, 54 பேர் பாதிக்கப்பட்டனர்.
இவர்களில், 3, 291 பேர் இறந்த நிலையில், 5, 549 பேர் சிகிச்சை பெறுகின்றனர்; சிகிச்சைக்கு பின், 72 ஆயிரத்து, 244 பேர் வீடு திரும்பி உள்ளனர்.கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை, 1,845 ஆக குறைந்துள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X