பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா அறிகுறியுடன் இருவர் அரசு மருத்துவமனையில் அனுமதி

Added : மார் 22, 2020
Share
Advertisement

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா அறிகுறியுடன் இருவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடு முழுவதும் அச்சத்தில் உள்ளனர். கொரோனா அறிகுறி இருந்தால் உடனடியாக அதற்கென உள்ள பிரத்யேக வார்டுகளில்அனுமதிக்கப்படுகின்றனர். அங்கு பரிசோதனை நடத்தப்பட்டு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே அதன் பாதிப்பிற்கான சிகிச்சை அளிக்கப்படும். ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆர்.எஸ்.மங்கலத்தை சேர்ந்த ஷாஜஹான் 35, என்பவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பினார். அவருக்கு தொடர் இருமல், மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவரை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதே போல், ராமேஸ்வரத்தை சேர்ந்த கவுதம் 30. இவர் கேரளாவில் வேலை செய்து வந்தார். இரு தினங்களுக்கு முன்பு ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு சளி, தொடர் இருமல் காரணமாக சிகிச்சைக்கு வந்துள்ளார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கும் பரிசோதனைகள்நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X