பொது செய்தி

தமிழ்நாடு

மீன் இறங்குதளம்: மீனவர்கள் வரவேற்பு

Added : மார் 22, 2020
Share
Advertisement

மாமல்லபுரம் : மீனவ பகுதிகளில், மீன் இறங்குதளங்கள் அமைக்க, சட்டசபையில் அறிவிக்கப்பட்டதால், கல்பாக்கம் பகுதி மீனவர்கள், மகிழ்ச்சியில் உள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில், கானத்துார் ரெட்டிகுப்பத்தில் துவங்கி, கடப்பாக்கம் ஆலம்பரைகுப்பம் வரை, மீனவர்கள் வசிக்கின்றனர். இவர்கள், வாழ்வாதாரத்திற்கு, கடலில் மீன்பிடித்து, விற்கின்றனர்.மீன் ஏலம் விட, வலை பின்ன - வைக்க, டீசல் பெற உள்ளிட்ட வசதிகளுடன், முக்கிய பகுதிகளில், மீன் இறங்குதளம் அமைக்க வேண்டும் என, நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், கல்பாக்கம் அடுத்த, வாயலுார் உய்யாலிகுப்பம், இடைக்கழிநாடு, புதுகுப்பம் பகுதிகளில், 17 கோடி ரூபாய் மதிப்பில், மீன் இறங்குதளங்கள் அமைக்க, சட்டசபை கூட்டத்தில், 110 விதியின்கீழ், தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை, மீனவர்கள் வரவேற்று, மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X