கை கழுவ குழாய் அமைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கை கழுவ குழாய் அமைப்பு

Added : மார் 22, 2020
Share

வாலாஜாபாத் : வாலாஜாபாத் தாலுகா மருத்துவமனையில், கலெக்டரின் அறிவுரைக்கு பின், கை கழுவுவதற்கு, தனி குழாய்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

வாலாஜாபாத் - வண்டலுார் சாலையில், அரசு தாலுகா மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு, காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா, நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களுக்கு, கை, கால்களை கழுவி செல்ல, போதிய குழாய் வசதி இல்லை என, தெரிய வந்தது.இதனால், மருத்துவமனைக்கு வருவோருக்கு, கழுவுவதற்கு, புதிய குழாய்கள் அமைக்க வேண்டும் என, கலெக்டர்பொன்னையா, மருத்துவமனை நிர்வாகத்திற்குஉத்தரவிட்டார்.

இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகம், புறநோயாளிகள் அனுமதி சீட்டு வழங்குமிடத்தில், இரு குழாய்கள் அமைத்து, கை கழுவுவதற்கு வசதிஏற்படுத்தி உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X