'கேப்' இல்லாம ரோடு போடுங்க

Added : மார் 22, 2020
Share
Advertisement

விருதுநகர், : 10 ஆண்டுகள் ஆகியும் ரோடு இல்லாத நிலை, எரியாத தெருவிளக்குகள், சேதமடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டி, காணாமல் போன மயான பாதை, அள்ளப்படாத வாறுகால் என எண்ணற்ற பிரச்னைகளில் சிக்க தவிக்கின்றனர் விருதுநகர் சத்திரரெட்டியபட்டி காமராஜர் காலனி மக்கள்.

விருதுநகர் ஒன்றியம் சத்திரரெட்டியபட்டி ஊராட்சியில் காமராஜர் காலனி அமைந்துள்ளது. இதில் 400க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் முறையாக செய்யப்படுவதில்லை. கடந்த 10 வருடங்களாக இப்பகுதிக்கு ரோடு எதுவும் போடவில்லை. தார் ரோடு மண் ரோடாக மாறி பல ஆண்டுகளாகி விட்டது. தற்போது ஊராட்சி நிர்வாகம் சார்பில் கருப்பசாமி நகரில் இருந்து காமராஜர் காலனி வரை ரோடு போடும் பணியை துவங்கியது. இதற்காக ஜல்லி கற்கள் கொட்டப்பட்டுள்ளது.

ரோட்டின் இடைபகுதியில் 500 அடி துாரம் வரை ஜல்லிக்கற்கள் போட்டு மீண்டும் அகற்றப்பட்டுள்ளது. ரோட்டை போட்டால் முறையாக போட வேண்டும். பாதி பகுதிக்கு போட்டு விட்டு, மீதி பகுதிக்கு போடாமல் இருப்பது தவறு. இந்த ரோடு வழியாக தான் இப்பகுதி மக்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர். புதியதாக ரோடு போடுவது மகிழ்ச்சி தந்தாலும் அதை முறையாக போடாதது வருத்தமளிப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

முறையாக ரோடு போடுங்க வெறும் மண்தரையாக இருந்த ரோட்டை, இப்போது சீரமைத்து தார் ரோடு போட முன்வந்தது பாராட்டுக்குரியது. இருப்பினும் இடைவெளி விடாமல் ரோட்டை முறையாக போட வேண்டும். இப்பகுதியில் உள்ள ஒருவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டது. கருப்பசாமி நகர் ரோடு மண்தரையாக இருந்ததால் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் சத்திரரெட்டியபட்டி வழியில் ஆம்புலன்ஸ் சென்றது. காலதாமதம் ஆனதால் அவர் வழியிலே இறந்துவிட்டார். கருப்பசாமி நகர் ரோட்டை முறையாக போட்டால் மீண்டும் மழைநீர் தேங்காது.-கண்ணன், கூலித்தொழிலாளி.

வீணாகும் குளியல் தொட்டி

இப்பகுதியில் பல்வேறு குறைபாடுகள் உள்ளது. அரசு நிர்வாகங்கள் எங்கள் கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பதே இல்லை. வாறுகாலை அள்ளாததால் சுகாதார கேடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குளியல் தொட்டி கட்டப்பட்டு வீணாகி வருகிறது. அதை முறையாக செயல்பாட்டுக்கு கொண்டு வந்தால் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.-மாரியப்பன், கூலித்தொழிலாளி.

குடிநீரின்றி சிரமம்

இப்பகுதியில் குடிநீர் என்பது பெரும் பிரச்னையாக உள்ளது. மேல்நிலை தொட்டியும் சரியில்லை, குடிநீர் வினியோகமும் முறையாக இல்லை. நாங்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்கள். சிலர் மட்டும் தான் குடிநீரை விலைக்கு வாங்கி அருந்துகின்றனர். வழியில்லாதவர்கள் பக்கத்து பகுதிகளில் சென்று குடிநீர் பெற வேண்டியுள்ளது. இப்படி இருந்தால் முதியவர்கள், கர்ப்பிணிகள் என்ன செய்வார்கள்.-சத்தியா, குடும்பத்தலைவி.

எரியாத தெருவிளக்கு

தெருவிளக்குகள் சுத்தமாக எரிவதே இல்லை. இரவு நேரங்களில் வெளியே நடமாட அச்சமாக உள்ளது.சுற்றி மரங்கள் அதிகமிருப்பதால் விஷப்பூச்சி களின் நடமாட்டம் அதிகமுள்ளது. ஆகவே பொதுமக்களின் கோரிக்கையை மனதில் வைத்து தெருவிளக்குகள் எரிய வைக்க ஊராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.-மாரியம்மாள், குடும்பத்தலைவி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X