வான்பாக்கம் சாலையோர பள்ளத்தால் விபத்து அபாயம்

Added : மார் 22, 2020
Share
Advertisement
 வான்பாக்கம் சாலையோர  பள்ளத்தால் விபத்து அபாயம்

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் வான்பாக்கம் சாலையோரம் பள்ளத்தால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது.

நெல்லிக்குப்பம் நகராட்சி வான்பாக்கம் பகுதி நகரத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் துாரத்தில் உள்ளது.இங்கு செல்லும் சாலையின் இருபுறமும் விவசாய நிலங்களே உள்ளன. இந்த சாலையை புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த மணல்மேடு கிருஷ்ணாபுரம் உட்பட பல கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அகலமான இந்த சாலையை ஆக்கிரமிப்புசெய்ததால் சாலை குறுகலானது. நகராட்சி மூலம் சாலை அமைக்கும் போது ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் குறுகலாகவே சாலை அமைத்தனர். இந்த சாலை வழியே கரும்பு அரவை சமயத்தில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட டிராக்டர், மாட்டு வண்டிகள் செல்கின்றன.சாலை குறுகலாக இருப்பதால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கிறது. வான்பாக்கம் பகுதியில் சாலையின் குறுக்கே பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அரைஅடி உயரத்துக்கு முறையற்ற வழியில் வேகத்தடை போட்டுள்ளனர்.அதேபோல் சாலையின் இருபுறமும் பள்ளமாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது.கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரியில் இருந்து பிளாஸ்டிக் துகள்கள் ஏற்றி வந்த லாரியின் டிரைவர் சாலையோரம் இருந்த பள்ளத்தை கவனிக்காமல் பள்ளித்தில் லாரியை இறக்கியதால், லாரி சிக்கிக்கொண்டது.இதனால் கரும்பு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையோரம் உள்ள பள்ளங்களை சரிசெய்தும் வேகத்தடைகளை சரி செய்ய நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது நல்லது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X