பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் டைரி

Added : மார் 22, 2020
Share
Advertisement

வேன் மோதி முதியவர் பலிஆத்துார்: செங்கல்பட்டு அடுத்த, ஆத்துார் வடபாதியைச் சேர்ந்தவர் மருதன், 70. இவர், ஆத்துார் இந்தியன் வங்கி அருகில், நேற்று முன்தினம் காலை, 6:30 மணிக்கு, மிதிவண்டியில் சென்றார்.அப்போது, பின்னால் வந்த, 'மகேந்திரா' வேன், அவர் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த மருதன், சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்து வந்த போலீசார், சடலத்தை மீட்டு, விசாரித்து வருகின்றனர்.

பணம் பறித்த மூவருக்கு, 'காப்பு!'கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அடுத்த, பொத்தேரியைச் சேர்ந்தவர் சிவா, 22. இவர், கூடுவாஞ்சேரி ரயில்வே மேம்பாலத்தில், நேற்று முன்தினம் நடந்து சென்றார். அப்போது, அவ்வழியாக வந்த மூன்று பேர், கத்தியை காட்டி மிரட்டி, அவரது பாக்கெட்டில் இருந்த, 500 ரூபாயை பறித்துச்சென்றனர்.கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கூடுவாஞ்சேரி சந்தோஷ், 21, பிரவீன்குமார், 21, மாடம்பாக்கம் இம்ரான், 20, ஆகியோரை கைது செய்தனர்.

வழிப்பறி செய்த மூவர் சிக்கினர்சோமங்கலம்: கூடுவாஞ்சேரி அடுத்த, ஊரப்பாக்கத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ், 23; இருங்காட்டுக்கோட்டை, 'சிப்காட்'டில், கார் தொழிற்சாலை ஒப்பந்த ஊழியர்.நேற்று முன்தினம், பணி முடித்து, இருசக்கர வாகனத்தில் சென்ற இவரை, சோமங்கலம் அருகே, மூன்று பேர் வழி மறித்தனர். விக்கேஷ் மொபைல் போனை பறித்து சென்றனர்.இது குறித்த புகாரையடுத்து, சோமங்கலம் போலீசார், விக்னேஷிடம் வழிப்பறியில் ஈடுபட்ட, நல்லுார் சரவணன், 23, செல்வம், 22, செல்வமணி, 27, ஆகியோரை கைது செய்தனர்

'குண்டாசில்' ரவுடி பிடிபட்டார் காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், புதிய ரயில் நிலையம் அருகில், காமராஜர் நகரைச் சேர்ந்தவர் பரத், 20. இவர் மீது வழிப்பறி, அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.ஜனவரி மாதம், பெரிய காஞ்சிபுரத்தில், இருசக்கர வாகனத்தில் சுற்றி வந்து, சிலரை கத்தியால் வெட்டினார். இதற்காக, கைது செய்யப்பட்டார்.

தொடர் குற்றங்களில் ஈடுபட்டதால், கலெக்டர் உத்தரவின்படி, 'குண்டர்' தடுப்பு காவலில், பரத்தை, நேற்று முன்தினம், போலீசார் கைது செய்தனர். கஞ்சா விற்ற இருவருக்கு, 'கம்பி' காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த திருக்காலிமேடைச் சேர்ந்த தாமோதரன், 20, கோவிந்தராஜ், 29, ஆகியோர், அதே பகுதியில், கஞ்சா விற்று வந்தனர்.சிவ காஞ்சி போலீசார், நேற்று முன்தினம், அவர்கள் வீட்டுக்கு சென்று, சோதனை செய்தனர். இதில், இருவர் வீட்டிலும் இருந்து, தலா, 1 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை கைது செய்தனர்.

தகராறு செய்த மூவர் கைதுகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம் -- உத்திரமேரூர் செல்லும் சாலை ஓரம் அமைக்கப்பட்ட தர்பூசணி கடைக்கு, நேற்று முன்தினம் மதியம், மூன்று பேர், தர்பூசணி பழம் வாங்க சென்றனர்.அப்போது, கடை வியாபாரிக்கும், அவர்களுக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இதில், பழங்களை உடைத்துள்ளனர்.தகவல் அறிந்த விஷ்ணு காஞ்சி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். வேளிங்கப்பட்டரை முனுசாமி, 27, விளக்கடி கோவில் தெரு பாலாஜி, 28, விவேகானந்தர் தெருவைச் சேர்ந்த பாலாஜி, 26, என, தெரிய வந்தது.விசாரித்த போலீசாரை, மூவரும் தரக்குறைவாக பேசினர். இதையடுத்து, மூவரையும்போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X