பொது செய்தி

தமிழ்நாடு

கல்வெர்ட் சேதம்: சீரமைக்கப்படுமா?

Added : மார் 22, 2020
Share
Advertisement
 கல்வெர்ட் சேதம்: சீரமைக்கப்படுமா?

புதுச்சத்திரம்: ஆலப்பாக்கம் அம்பேத்கர் நகரில் கல்வெர்ட் உடைந்து சேதமடைந்துள்ளதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

புதுச்சத்திரம் அடுத்த ஆலப்பாக்கம் அம்பேத்கர் நகரில் சுமார் 500 பேர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடலூர் - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அம்பேத்கர் நகரை இணைக்கும் வகையில் உள்ள இணைப்பு சாலையில், கல்வெர்ட் அமைக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக இப்பகுதி மக்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில் தற்போது இந்த கல்வெர்ட் உடைந்து சேதமடைந்துள்ளளது. இதனால் இரவு நேரங்களில் சைக்கிள், பைக் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர் அடிக்கடி கீழே விழுந்து விபத்தில் சிக்கிக்கொள்வது வாடிக்கையாகிறது.எனவே பொதுமக்கள் நலனை கருத்தில்கொண்டு, ஆலப்பாக்கம் அம்பேத்கர் நகரில் சேதமடைந்துள்ள கல்வெவர்ட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X