பொது செய்தி

தமிழ்நாடு

நுாலகங்களில் கிருமி நாசினி

Added : மார் 22, 2020
Share
Advertisement

வடலுார்: நுாலகங்களில் கைகளை சுத்தம் செய்து கொள்ள வசதி செய்து தருமாறு வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்க்க பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தற்காலிகமாக விடுமுறை விடப்பட்டுள்ளது. இருப்பினும் நூலகங்கள் வழக்கம் போல இயங்கி வருகின்றன. தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா வைரஸ் நூலக வாசகர்கள் மத்தியிலும் பீதியை கிளப்பி உள்ளது.குறிஞ்சிப்பாடி, வடலூர் பகுதிகளில் கிளை நூலகங்கள் இயங்கி வருகின்றன. இங்கு தினசரி செய்தித்தாள்கள், வார இதழ்களை படிப்பதற்கு ஏராளமான வாசகர்கள் வருகை புரிகின்றனர். மேலும் புத்தகங்களை வீடுகளுக்கு ௭டுத்துச் சென்று படிக்கும் நூலக உறுப்பினர்களாக உள்ள வாசகர்களும் தினசரி நூலகம் செல்கின்றனர்.பெரும்பாலான நேரங்களில் இங்கு செய்தித்தாள்களை படிப்பதற்காக செல்லும் வயது முதிர்ந்த வாசகர்கள், கொரோனா வைரஸ் தொற்று குறித்து தற்போது கவலை தெரிவித்து வருகின்றனர். நுாலகங்களில் கைகளை சுத்தம் செய்து கொண்டு செய்தித்தாள்கள் மற்றும் புத்தகங்களை படிப்பதற்கு வசதிகள் செய்து தரவும், சோப்பு கொண்டு கைகளை சுத்தம் செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X