சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தேசிய நெடுஞ்சாலைகள், 'வெறிச்'

Added : மார் 22, 2020
Share
Advertisement

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தை பொறுத்தவரை, 251 அரசு பஸ்கள், 100 தனியார் பஸ்கள் மற்றும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் நேற்று இயங்கவில்லை.

திருவள்ளூர், திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை மற்றும் கும்மிடிப்பூண்டி தாலுகாக்களில் செயல்பட்டு வரும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கடைகள், மூடப்பட்டிருந்தன.சாலையில் நடமாட்டம் குறைவாக இருந்தது. ஒரு சில பகுதிகளில் மட்டும் இறைச்சிக் கடைகள் இயங்கின. காலை, 9:00 மணிக்கு பின், அவைகளும் மூடப்பட்டன.மேலும், திருவள்ளூர் - திருப்பதி, சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலைகளில், தினமும் இயங்கும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள், நேற்று இயக்கப்படவில்லை.

இதனால், சாலைகள் அனைத்தும் வெறிச்சோடிக் காணப்பட்டன.திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி, நேற்று காலை திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு வந்து, கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்டார்.கம்பெனிகள் மூடல்திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று, மப்பேடு, பாப்பரம்பாக்கம், கீழச்சேரி மற்றும் பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில், பன்னாட்டு நிறுவன தொழிற்சாலைகள் இயங்கின. தகவல் அறிந்ததும், வருவாய் துறையினர், அத்தொழிற்சாலை இயங்காமல், மூட உத்தரவிட்டனர்.பொன்னேரிபொன்னேரி, மீஞ்சூர், திருப்பாலைவனம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும், கடைகள் மூடப்பட்டிருந்தன. ஒன்றிரண்டு இருசக்கர வாகனங்களை தவிர வேறு வாகனங்கள் சாலைகளில் பயணிக்கவில்லை; சிறுகடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

பழவேற்காடு பகுதியில் மீனவர்கள் யாரும் தொழிலுக்கு செல்லாமல் வீடுகளில் தங்கினர்.கும்மிடிப்பூண்டிசென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், அத்தியாவசிய சரக்கு வாகனங்களை மட்டுமே காண முடிந்தது.புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்ட போதிலும், ரயில் பயணியர் இன்றி, கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.தமிழக _ ஆந்திர எல்லை பகுதியான ஆரம்பாக்கத்தில், தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே தமிழக போலீசாரும், ஆந்திர மாநில தடா பகுதியில் ஆந்திர போலீசாரும் பேரிகாட் அமைத்து, வாகனங்களை தடுத்து நிறுத்தினர்.

சில வாகனங்களை திருப்பி அனுப்பினர்.ஐ.ஜி., ஆய்வுகும்மிடிப்பூண்டி அடுத்த, எளாவூர் பகுதி யில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில், தமிழக வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி., நாகராஜன், திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி., அரவிந்தன் ஆகியோர், ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில், மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதார மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு ஆலோசனை வழங்கினர்.திருத்தணிதிருத்தணி நகர் மற்றும் தாலுகாவில் ஊரடங்கிற்கு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் முழு ஒத்துழைப்பு அளித்தனர். அனைத்து கடைகள், ஓட்டல்கள் மற்றும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.

பஸ்கள், ரயில்கள் ஒடவில்லை.தமிழக- - ஆந்திர மாநில எல்லையான திருத்தணி பொன்பாடி சோதனைச்சாவடியில், திருத்தணி போலீசார் எந்த வாகனங்கள் வராத வண்ணம், இரும்பு தடுப்புகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.டூ - -வீலர்களுக்கு தடைஆந்திர மாநிலங்களில் இருந்து, தமிழக எல்லைக்கு வரும் லாரிகள், கனரக வாகனங்கள் பொன்பாடி சோதனைச்சாவடி அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டன. இருசக்கர வாகனங்களையும், தமிழகத்திற்கு நுழைய விடாமல் போலீசார் தடுத்து அனுப்பினர்.தகவல் கொடுக்கஅதிகாரிகள் மறுப்புகொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில், திருவள்ளூர் மாவட்டம் முழுவதும், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

மூடப்பட்ட கடைகள், வணிக வளாகம், தியேட்டர்கள் என, அதிகளவில் மக்கள் கூடும் இடங்கள், நிறுத்தப்பட்ட வாகன போக்குவரத்து, குறித்து, கலெக்டர் மகேஸ்வரியிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.அவர், அதிகாரிகளிடம் கேட்டு சொல்வதாக கூறினார். பின், அதிகாரிகளிடம் கேட்டபோது, யாரும் எண்ணிக்கையை தெரிவிக்கவில்லை. இதனால், நிறுத்தப்பட்ட வாகன எண்ணிக்கை, மூடப்பட்ட, மக்கள் கூடும் இடங்களின் முழு விபரம் கடைசி வரை தெரிவிக்காமல், அதிகாரிகள் மழுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X