தமிழ்நாடு

'மக்கள் ஊரடங்கு'; பஸ்கள் நிறுத்தம்; 30 ரயில்கள் ரத்து

Added : மார் 22, 2020
Share
Advertisement
 'மக்கள் ஊரடங்கு'; பஸ்கள் நிறுத்தம்; 30 ரயில்கள் ரத்து

விருதுநகர் மாவட்டத்தில் ஊரடங்கை முன்னிட்டு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன. 419 அரசு பஸ்கள், 121 தனியார் பஸ்கள் நிறுத்தப்பட்டன. விருதுநகர் வழியாக செல்லும் 30 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

விருதுநகரில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் மெயின் பஜார் வீதி, தேசபந்து மைதானம், தெப்பம் அதை சுற்றிய பகுதிகள் என அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது. ஏற்கனவே வணிக பேரவையானது கடை அடைப்பை அறிவித்திருந்ததால் மெடிக்கல் கடைகளை தவிர வேற எந்த கடைகளும் திறக்கப்படவில்லை. விருதுநகரின் அனைத்து பகுதி மக்களும் முறையாக மக்கள் ஊரடங்கை கடைபிடித்து அரசுக்கு உதவினர்.

ஆள்நடமாட்டமில்லாததால் நகராட்சி நிர்வாகம் சார்பில் மக்கள் நெரிசல் மிக்க பகுதிகளாக கருதப்படும் பழைய பஸ் ஸ்டாண்ட், மெயின் பஜார், தேசபந்து மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் கிருமிநீக்கம் செய்தனர்.ஸ்ரீவில்லிபுத்துார்ஸ்ரீவில்லிபுத்துார் அனைத்து பகுதிகளிலும் கடைகள் முழுஅளவில் அடைக்கப்பட்டிருந்தது. தெருக்கள் மற்றும் பஜார் வீதிகளில்மக்கள் நடமாட்டம் முற்றிலும் குறைந்திருந்தது.

ஊரடங்கை மீறி, நகரில் இரு இடங்களில் செயல்பட்டு வந்த டீக்கடைகள், ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் போலீசார் கண்டித்தததையடுத்து, டீக்கடைகள் மூடப்பட்டது.ஆண்டாள் கோயிலில் கோயில் நடைமூடப்பட்டிருந்த நிலையில், பக்தர்களின்றி வழக்கமான பூஜைகள் நடந்தது. பெரியமாரியம்மன் கோயில் பூக்குழி விரதமிருந்த பக்தர்கள், கோயில் வாசலில் அம்மனை வணங்கி சென்றனர். டாஸ்மாக் கடைகள் மூடபட்டிருந்தாலும், கூடுதல் விலை கொடுத்தாவது மதுபாட்டில்கள் வாங்குவதற்கு குடிமகன்கள், ஆங்காங்கே நின்று கொண்டிருந்தனர்.

பஸ் ஸ்டாண்ட், அரசு மருத்துவமனை, பென்னிங்டன் காய்கறி மார்கெட் பகுதிகளில், நகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள்கிருமிநாசினி தெளித்துசுத்தம் செய்தனர். வத்திராயிருப்பில் தேவையற்ற விதத்தில் பஜார் வீதியில் கூடியிருந்தவர்களை, வீடுகளுக்கு செல்லுமாறுபோலீசார் அறிவுறுத்தி கலைந்து போக செய்தனர்.

அருப்புக்கோட்டை:

அருப்புக்கோட்டையில் 100 சதவிகிதம் கடைகள் அடைக்கப்பட்டது. பஸ்கள், பிற வாகனங்கள், கடைகள்அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. ஒருசில கடைகள் திறக்கப்பட்டு மீண்டும் அடைக்கப்பட்டன. பஸ் ஸ்டாண்ட் வெறிசோடி காணப்பட்டது. கூட்டம் அதிகம் காணப்படும் மதுரை ரோட்டில் பஜார் வெறிசோடியிருந்தது. வீடுகளில் மக்கள் வாசலில் மஞ்சள் தெளித்து, நிலையில் வேப்பிலை கட்டி வைத்திருந்தனர்.

திருச்சுழியிலும் இதே போன்று கடைகள் அடைக்கப்பட்டு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தனர்.மாலையில் மக்கள் வீட்டின் முன்பும், மாடியல்நின்றும் கொரோனா விழிப்புணர்வுக்கு கடமயைாற்றுபவர்களுக்கு கைகளை தட்டி நன்றி கூறினர்.சிவகாசிசிவகாசி அண்ணாதுரை காய்கறி மார்க்கெட், ஜவுளி கடைகள், ஓட்டல்கள், சூப்பர் மார்க்கெட், டீக்கடை உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் நகரமே வெறிச்சோடியது. ஆட்டோ, பஸ்கள், வேன்கள் ஓடவில்லை. பட்டாசு, தீப்பெட்டி உரிமையாளர்கள் ஆதரவு தெரிவித்து இருந்ததால் அனைத்து ஆலைகளும் மூடப்பட்டிருந்தன.

நகரில் அவ்வப்போது அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே ஒரு சிலர் நடமாடினர். சிவகாசி, திருத்தங்கல்லை சுற்றியுள்ள கிராமங்களிலும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டது. காலையில் சிறிது நேரம் மட்டும் சிவகாசியில் இறைச்சி கடைகள் திறந்திருந்தன. மாஸ்க் அணிந்த போலீசார் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.சாத்துார்சாத்துாரில் நேற்று கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்கவில்லை. அச்சகம் மற்றும் நிப் கம்பெனிகள் மூடப்பட்டிருந்தன.

ஏழாயிரம்பண்ணை, தாயில்பட்டி, வெம்பக்கோட்டை பகுதிகளிலும் தீப்பெட்டி தொழிற்சாலைகள் மற்றும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. பொது மக்கள் அமைதியாக வீடுகளில் தங்கி இருந்தனர். குழந்தைகளை வெளியில் விளையாட பெற்றோர் அனுமதிக்கவில்லை. பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், முக்குராந்தல் பகுதிகளில் போலீசார் மாஸ்க் அணிந்தபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

ராஜபாளையம்:

ராஜபாளையத்தில் எப்போதும் நெரிசலுடன் காணப்படும் தென்காசி தேசிய நெடுஞ்சாலை, டி.பி மில்ஸ் ரோடு, முடங்கியாறு ரோடு வெறிச்சோடி காணப்பட்டது. இதையும் மீறி வெளியே சுற்றி வந்த நபர்களையும் வாகனங்களையும் காந்தி கலைமன்றம் அருகே போலீசார் நிறுத்தி முழு அடைப்பிற்கான முக்கியத்துவத்தை விளக்கி வைரஸ் நோயின் தீவிரத்தை மைக் மூலம் எச்சரிக்கை செய்தனர். விளையாட்டு போக்கில் சுற்றி வந்த பொதுமக்களிடம் போலீசார் அறிவுறுத்திய விதம் பொது மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X