அங்காளம்மன் கோவிலில்இன்று மயானக் கொள்ளை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அங்காளம்மன் கோவிலில்இன்று மயானக் கொள்ளை

Added : மார் 22, 2020
Share

புதுச்சத்திரம்: சம்மந்தம் அங்காளம்மன் கோவிலில் இன்று மயானக்கொள்ளை திருவிழா நடக்கிறது.புதுச்சத்திரம் அடுத்த சம்மந்தம் அங்காளம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் மயானக்கொள்ளை திருவிழா நடப்பது வழக்கம். இந்த வருடம் 11 வது ஆண்டு திருவிழா கடந்த 21 ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று காலை 10.00 மணிக்கு பால்குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, இரவு 11.00 மணிக்கு இருளமுகம் நடக்கிறது.சிறப்பு விழாவான மயானக்கொள்ளை திருவிழா இன்று நடக்கிறது. அதனையொட்டி காலை 9.00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. மதியம் 1.00 மணிக்கு கரகம் புறப்பாடு செய்து, மாலை 5.00 மணிக்கு மயானக்கொள்ளை உற்சவம், 24 ம் தேதி மஞ்சள்நீர் விளையாட்டு விழா நடக்கிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X