சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடம்பத்துார் ஒன்றியத்தில் 3 தொழிற்சாலைகளுக்கு பூட்டு

Added : மார் 22, 2020
Share
Advertisement

கடம்பத்துார் : மத்திய, மாநில அரசுகளின் உத்தரவை மீறி, கடம்பத்துார் ஒன்றியத்தில் செயல்பட்ட மூன்று தொழிற்சாலைகளை, வருவாய்த் துறை அதிகாரிகள் பூட்டு போட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியம், கீழச்சேரி ஊராட்சியில், மத்திய, மாநில அரசுகளின் உத்தரவை மீறி, கார் உதிரி பாகங்கள் தொழிற்சாலை இயங்கி வந்தது.இதையடுத்து, ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள், தொழிற்சாலைக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்த, வருவாய் ஆய்வாளர் சாருலதா, கிராம நிர்வாக அலுவலர்கள் லோகநாதன், பிரகாஷ் மற்றும் ஊராட்சி செயலர் ஆனந்தன் ஆகியோர் தொழிற்சாலைக்கு சென்றனர்.அங்கு பணியில் இருந்த, 200க்கும் மேற்பட்ட ஊழியர்களை தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றினர். பின், தொழிற்சாலைக்கு பூட்டு போட்டனர்.

பாப்பாரம்பாக்கம், மப்பேடு ஊராட்சிகளில், இயங்கி வந்த கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையிலும், மத்திய, மாநில அரசுகளின் உத்தரவை மீறி பணியிலிருந்த தொழிலாளர்களை வெளியேற்றி, நேற்று விடுப்பு அளிக்கும்படி, தொழிற்சாலை நிர்வாகத்தை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.மேலும், மத்திய, மாநில அரசுகளின் உத்தரவை மீறி செயல்பட்ட தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X