13 ஆயிரத்தை தாண்டியது, 'கொரோனா' பலி: 100 கோடி மக்கள் வீடுகளில் முடக்கம்

Updated : மார் 22, 2020 | Added : மார் 22, 2020
Share
Advertisement

ரோம்:உலகெங்கும், 'கொரோனா' வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 13 ஆயிரத்தைத் தாண்டியது. அதையடுத்து, பல நாடுகளில், 100 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளில் முடங்கிஉள்ளனர்.
சீனாவில் துவங்கிய வைரஸ் பாதிப்பு, உலகெங்கும் மிகவும் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, ஐரோப்பிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. உலகெங்கும் இந்த வைரஸ் தொற்று, 3 லட்சத்து, 8,594 பேருக்கு இருப்பது உறுதியாகி உள்ளது. அதில், 95 ஆயிரத்து, 829 பேர் குணமடைந்துள்ளனர். இருப்பினும், 13 ஆயிரத்து, 69 பேர் உயிரிழந்துள்ளனர்.சீனாவில், வைரஸ் தொற்று உள்ளோர் எண்ணிக்கை, 81 ஆயிரத்து, 54 ஆக உயர்ந்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக, புதிதாக யாருக்கும் பாதிப்பு ஏற்படாத நிலையில், நேற்று முன்தினம், சீனர் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், ஆறு பேர் பலியாக, சீனாவில் பலி எண்ணிக்கை, 3,261ஆக உயர்ந்துள்ளது.அமெரிக்காவில், நியூயார்க், சிக்கா, லாஸ் ஏஞ்சலஸ் போன்ற முக்கிய நகரங்கள் முடக்கப்பட்டுள்ளன. அங்கும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நியூ ஜெர்சி நகரத்திலும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வீட்டை விட்டு வெளியேற முழு தடை விதிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளில், குறிப்பாக, இத்தாலியில் கடும் பாதிப்பு உள்ளது. ஒரு நாளில், 800க்கும் மேற்பட்டோர் உயிரிழக்க, பலி எண்ணிக்கை, 4,825 ஆக உயர்ந்தது. அதிகமானோர் பலியான நாடுகளில், சீனாவை முந்தி, இத்தாலி முதலிடத்தில் உள்ளது. அங்கு, 53 ஆயிரத்து, 578 பேருக்கு, வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.மொத்தம், ஆறு கோடி பேர் மக்கள் தொகை கொண்ட இத்தாலியில், வைரஸ் பாதித்தவர்களில், 8.6 சதவீதம் பேர் உயிரிழந்துள்ளனர். இது உலக நாடுகளில் மிகவும் அதிகமாகும். ஏற்கனவே, கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், தேவையில்லாத, தொழிற்சாலைகளை மூடும்படி, இத்தாலி பிரதமர், குய்சிபி காண்டே உத்தரவிட்டுள்ளார்.மற்றொரு ஐரோப்பிய நாடான, ஸ்பெயினில் பலி எண்ணிக்கை, 32 சதவீதம் உயர்ந்துள்ளது. பிரான்சில், பலி எண்ணிக்கை, 562 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானம் மூலம், போலீசார் கண்காணித்து வருகின்றனர்.வைரஸ் பாதிப்பு இருந்தபோது, ஹூபய் மாகாணத்துக்குள் நுழைவதற்கும், வெளியேறுவதற்கும் சீன அரசு தடை விதித்திருந்தது.அதனால், வைரஸ் பாதிப்பு பரவுவது வேகமாக கட்டுப்படுத்தப்பட்டது. அதையடுத்தே, வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள நாடுகள், பல்வேறு நகரங்களை முடக்கி வருகின்றன. இவ்வாறு, உலகம் முழுவதும், 35 நாடுகளில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இதனால், 100 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளில் முடங்கிஉள்ளனர்.
உலகெங்கும் உள்ள நிலை
நாடு தொற்று உள்ளோர் புதிதாக பாதிக்கப்பட்டோர் மொத்த பலி புதிதாக பலியானோர்சீனா 81,054 46 3,261 6இத்தாலி 53,578 - 4,825 -அமெரிக்கா 26,892 2,685 348 46ஸ்பெயின் 25,496 - 1,381 -ஜெர்மனி 22,364 - 84 -ஈரான் 20,610 - 1,556 -பிரான்ஸ் 14,459 - 562 -தென்கொரியா 8,897 98 104 2சுவிட்சர்லாந்து 6,863 - 80 -பிரிட்டன் 5,018 - 233 -நெதர்லாந்து 3,631 - 136 -ஆஸ்திரியா 3,024 32 8 -பெல்ஜியம் 2,815 - 67 -நார்வே 2,169 5 7 -ஸ்வீடன் 1,1770 - 20 -கனடா 1,328 - 19 -டென்மார்க் 1,326 - 13 -ஆஸ்திரேலியா 1,286 214 7 -போர்ச்சுகல் 1,280 - 12 -மலேசியா 1,183 - 9 1பிரேசில் 1,178 - 18 -ஜப்பான் 1,054 - 36 -இந்தியா 332 - 5 ---
சிங்கப்பூரில் முதல் பலி

ஆசிய நாடான சிங்கப்பூரில், 385 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. வைரசால் உயிர் பலி ஏற்படாமல் தடுக்க, அரசு நிர்வாகம் சிறப்பான சிகிச்சை அளித்து வந்தது. இந்த நிலையில், 75 வயது சிங்கப்பூர் பெண் மற்றும், 64 வயது இந்தோனேஷிய நபர், நேற்று முன்தினம் இறந்தனர். சிங்கப்பூரில் பதிவான முதல் பலி இது.
'விரைவில் தீர்வு'
மேற்காசிய நாடான ஈரானில், வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 1,500ஐத் தாண்டியுள்ளது. இந்த நிலையில், 'அரசு நிர்வாகம் எடுத்து வரும் சிறப்பாக நடவடிக்கைகளால், அடுத்த, 15 நாட்களுக்குள், வைரஸ் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்' என, அந்த நாட்டு அதிபர், ஹாசன் ரூஹானி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.ஆப்ரிக்காவிலும் முடக்கம்எரிடிரியா மற்றும் அங்கோலா ஆகிய நாடுகளிலும், கொரோனா வைரஸ் பாதிப்பு பரவியுள்ளது. அதையடுத்து, ஆப்ரிக்காவில் உள்ள, 54 நாடுகளில், 41ல், வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நைஜீரியா, ருவாண்டா ஆகியவை, தங்களுடைய எல்லையை மூடியுள்ளன. வெளிநாட்டவர் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மக்கள் வீடுகளில் முடங்கியிருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. உகாண்டாவும் எல்லையை மூடியுள்ளது. இவ்வாறு பல்வேறு ஆப்ரிக்க நாடுகளில் கட்டுப்பாடுகள் துவங்கிஉள்ளன.
ஒரே நாளில், 112 பேர் பலி
ஐரோப்பிய நாடான பிரான்சில், நேற்று முன்தினம் மட்டும், 112 பேர் உயிரிழந்தனர். அதையடுத்து, பலி எண்ணிக்கை, 562 ஆக உயர்ந்தது. பாதிக்கப்பட்டோர், எண்ணிக்கை, 14 ஆயிரத்து, 459 ஆக உயர்ந்தது.மக்கள் வீடுகளிலேயே முடங்கியிருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தகுந்த ஆதாரம் இல்லாமல், வெளியே சென்றால், 11 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படுகிறது.
'மிகக் கடினமான நாட்கள்'
ஐரோப்பிய நாடான ஸ்பெயினில், வைரஸ் தொற்று உள்ளோர் எண்ணிக்கை, 24 ஆயிரத்து, 926 ஆக உயர்ந்தது. வைரசால், 1,381 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், 'டிவி'யில் நாட்டு மக்களிடம் உரையாற்றிய, அந்த நாட்டு பிரதமர், பெட்ரோ சாஞ்சஸ், ''மிகவும் கடினமான நாட்களை எதிர்கொள்ள, மனதளவிலும், உணர்வு அடிப்படையிலும் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்,'' என்றார்.Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X