செயல்படாத, அம்மா உணவகம் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செயல்படாத, 'அம்மா' உணவகம்

Added : மார் 22, 2020
Share

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம், அரசு மருத்துவமனை வளாகத்தில் இயங்கும், 'அம்மா' உணவகம், நேற்று மூடப்பட்டு இருந்ததால், உணவகத்தில் சாப்பிட வந்த நோயாளிகளின் உறவினர்கள், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க, நேற்று, மக்கள் ஊரடங்கு மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், பொதுமக்கள் நலன் கருதி, ஆவின் பால், மருத்துவமனை, மருந்தகங்கள், 'அம்மா' உணவகம், இறைச்சி கடை, பெட்ரோல் பங்க் ஆகியவை, முழு நாள் இயங்கும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது.தனியார் உணவகங்கள் திறக்கப்படாத நிலையில், அம்மா உணவகம் செயல்படும் என்ற அரசின் அறிவிப்பு, அம்மா உணவகத்தில் சாப்பிடும் வாடிக்கையாளர்களுக்கு, ஆறுதலை அளித்தது.இருப்பினும், காஞ்சிபுரத்தில், அரசு மருத்துவமனை வளாகம் மற்றும் விளக்கடிகோவில் தெருவில் இயங்கி வந்த இரு அம்மா உணவகங்களும், நேற்று மூடப்பட்டிருந்தன.

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளி களுக்கு, பாதுகாப்புக்கு வந்துள்ள உறவினர்கள், அம்மா உணவகம் மூடப்பட்டிருந்ததை கண்டு ஏமாற்றம் அடைந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X