சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உணவின்றி தவித்த மனநலம் பாதித்தவர்கள்

Added : மார் 22, 2020
Share
Advertisement

பொன்னேரி : மனநலம் பாதித்து சுற்றி திரிபவர்கள், வியாபாரிகள் தரும் உணவுகளை சாப்பிட்ட நிலையில், நேற்று, அவர்களுக்கு உணவு கிடைக்காமல் பரிதாபமாக சுற்றித் திரிந்தனர்.

பொன்னேரி- - - பழவேற்காடு சாலையில், 10க்கும் மேற்பட்ட மனநலம் பாதித்தவர்கள் சுற்றித் திரிகின்றனர். இவர்கள், கால்போன போக்கில் சென்றபடி உள்ளனர். இவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்பது தெரியவில்லை. பெரும்பாலானவர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர்.அழுக்கு உடையுடன், கிழிந்த துணிகளை கையில் வைத்துக் கொண்டு இவர்கள் திருப்பாலைவனம், பழவேற்காடு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித் திரிகின்றனர். இவர்கள் யாரிடமும் பிச்சை கேட்பது இல்லை.

வியாபாரிகள் தரும் உணவுகளையும், கடைகளுக்கு வரும் பொதுமக்கள் வாங்கி தரும் திண்பண்டங்களை வாங்கி சாப்பிட்டு வந்தனர்.இந்நிலையில், நேற்று மக்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. பொதுமக்கள் வெளியில் வராத நிலையில் மேற்கண்ட மனநலம் பாதித்தவர்கள் உணவு கிடைக்காமல் பரிதாபமாக சுற்றித் திரிந்தனர்.இவர்களை மீட்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X